Friday 4 January 2019

ஓவியம்

ஆதி மனிதன் மொழி வளராத காலத்தில் ஓவியங்கள் மூலமாகத்தான் தன் உணர்வுகளைப் பிறருக்குக் கடத்தி இருக்க வேண்டும்

எந்தச்செடியின் மூலம்.என்ன நிறம் பெறலாம்.எனக்கண்டறிந்து அதனைப்.பயன்படுத்தி வண்ண ஓவியம் தீட்டியது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்...

ஓவியத்திற்கு நேர்கோடு.கோணக்கோடு..வளை கோடு மட்டுமே அடிப்படை..

ஓவியம்..ஓவ,ஓவியம்,சித்திரம்,படம்,,படாம்,வட்டிகைச் செய்தி என்ற சொற்களாலு.வழங்கப்பட்டது.

ஆண் ஓவியர்களை சித் ராங்கதன் என்றும் பெண் ஓவியர்களை சித் ர சேனா என்றும்.அழைப்பார்கள்..

ஓவியக்கூடங்களை சித் ரக் கூடம், சித் ர மாடம், எழுதுநிலை மண்டபம்.எழுதெழில்,அம்பலம் என்று அழைத்தார்கள்..

வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால்.வரையும் ஓவியங்களை புனையா ஓவியம் என்கிறார்கள்.

ஓவியங்களில் நிற்றல்.இருத்தல்,கிடத்தல், ஆகிய மனித இயல்புகளையும் வீரம்,சாந்தம்,சினம்,வியப்பு,உவகை முதலிய மெய்பாடுகளையும்,உத்தமம்,மத்திமம், அதமம், மற்றும் தசதாளம்,நவதாளம், பஞ்சதாளம்,முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழுக்குரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன

7 ம் நூற்றாண்டின் மகேந்திரப் பல்லவன் அவன் ஓவியத் திறமைக்காக சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டான்..(இப்ப முதல்வரா இருந்தா...டாக்டர் பட்டம் கொடுத்தாங்களே அப்படியாத்தான் இருக்குமோ??😁🤔)
தட்சிணசித்திரம் என்னும ஓவிய்.நூலுக்கு மகேந்திரப் பல்லவன் உரை எழுதினார்.

1.சிலப்பதிகாரத்தில் " ஓவியச் செந்நூலுரை நூற்கிடக்கை " என்ற வரி வருகிறது

2.உயிர் பெற எழுதப்பட்ட ஓவியப் பாவை ( சீவக 2048) என்று சீவக சிந்தாமணி சொல்கிறது.

3. தொல்காப்பியத்தில் நடுகல் வணக்கம்- கண்ணெழுத்து பற்றி குறிப்பு உள்ளது. சிற்பங்கள் செதுக்குமுன் ஓவியம் வரைந்த பின்னரே சிற்பங்கள் செதுக்குவர்..

4. புற நானூற்றில் ஓவத்தனைய இடநுடை அமைப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்பாக சொல்வார்கள்..

இந்தியாவில் எல்லோரா ஓவியம் நேர்த்தியானவை..அழகானவை..புகழப்படுபவை..

6.காந்தாரம்..தட்சசீலம் இரண்டும் பாரசீக அடிப்படையிலான ஓவியங்கள்...

7.நாளந்தா அடிப்படை ஓவியங்களே பின்னர் பிரசித்தி பெற்றது

8.பிரான்சின் மிகப்.பழமையான ஓவியம் ( grottechuver) குரோட்டே சோவேட்டில் 32000 ஆண்டுகள்.பழமையானவை..

9.ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆல்டமிரா குகை பாறை ஓவியங்கள் 12000 வருடங்கள்.பழமையானவை..

10.பிரான்சின்..லாஸ்கோக்ஸ்,,டோர்டேர்க்னே ஆகிய இடங்களில் சுவர் ஓவியங்கள்.கண்டு பிடிக்கப்பட்டன...

11 .இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்கள் 40 ஆயிரம் வருடங்கள்.பழமையானவை...

ஓவியப் புத்தகங்களாக நான் பார்க்க படிக்க நினைப்பவை..
1. டிராஸ்கி மருது
2.ஸ்டுபர்ட்சிபி
3.சுந்தரபிள்ளை சிவரெத்தினம்
4.பாரதிபுத்திரன்
5.ஏஞ்சலினாபாமா பால்
6.நா.அருள் முருகன்
7.பி.ஏ.கிருஷ்ணன்
8.ரவிராஜ்
9.புகழேந்தி..

( எந்தப் புத்தகமும் அம்மா வாங்கித் தரமாட்டாளாம்)

கீழே நான் சாதாரண பென்சிலால்.வரைந்த ஓவியங்களைப்பாருங்கள்..


இன்னும் மேம்படுத்துக் கொள்ள Faber castell பென்சிலாவது கேட்டேன்..அதையும் வாங்கித் தர மாட்டாங்களாம்..

பின் குறிப்பு..யாராவது அம்மாவிடம் எனக்காக சிபாரிசு பண்ணுங்களேன்...

பி ஏ கிருஷ்ணனின் நூல் 800 ரூ என நினைக்கிறேன்..

புகழேந்தி எழுதிய நானும் நிறங்களும் புத்தகமாவது படிக்க ,,பார்க்க விரும்புகிறேன்...

எப்போது கிடைக்குமோ??

18 comments:

  1. நல்ல தகவல்கள் ஓவியங்கள் அருமை வாழ்த்துகள்.

    ஏதேதோ நூல்கள் படிக்கிறே... நன்று. மாமா எழுதிய நூலை படிக்கவில்லை போலயே...

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம்.படிக்கிறேன் அங்கிள்...உங்க எண் பழைய.போன் ல இருந்தது..அம்மா நம்பர் உங்களிடம் இருந்தால் முகவரி பெற்று அனுப்புங்கள்...( நீங்கள்.புத்தகம்.எழுதிய விவரமே இப்ப தான் எனக்குத் தெரிகிறது) அம்மா உங்கள் வங்கிக் கணக்கில் பணம்.செலுத்தி பெற்றுக் கொண்டு எனக்குத் தரட்டும்

      Delete
  2. Replies
    1. நன்றி...யாருனே தெரியலை..உங்க.பெயர் தெரிஞ்சா...இன்னும்...இன்னும் என்.அன்பை உங்களுக்குத் தெரிவிக்க நல்லாருக்கும்..

      Delete
  3. நல்ல தகவல்கள்..
    வாவ்! உங்கள் ஓவியத் திறமை வியக்க வைக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு சூர்யா....ஃபேபர் கேசில் சூப்பரா வரையும். அதிலும் ட்ராயிங்க் பென்சில்ஸ் நு பென்சில்கள் அதாவது அதிக கறுப்பு, கொஞ்சம் லைட் ஷேட்ஸ் என்று வித விதமாக இருக்கு சூரியா...

    https://pencils.com/hb-graphite-grading-scale/

    இந்த சுட்டி பாருங்க..முடிஞ்சா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி uncle and aunty கட்டாயம் பார்க்கிறேன்

      Delete
  4. இரண்டாவது படத்தில் வலது கண்...பெண்ணின் வலது கண் முடியின் அருகில் அது மட்டும் கொஞ்சம் ப்ரொஜெக்ட்டடா அதாவது கண் முகத்தோடு இல்லாமல் வெளியில் துருத்திக் கொண்டு உள்ளது போல இருக்கு...மற்றபடி சூப்பர்ப்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி aunty.கட்டாயம் திருத்திக் கொள்கிறேன்..

      Delete
  5. Anbu chellathirku en anbin vazhthukal

    ReplyDelete
    Replies
    1. ஹை...நான் உங்க செல்லமா...நன்றி

      Delete
  6. Replies
    1. நீங்க ஏன் unlucky man.அதான் ராகசூர்யா வலைதளம்.பாத்துடீங்கல்ல...இனி உங்களுக்கு காலம் எல்லாம்.அதிஷ்டம் தான்😁😁😁

      Delete
  7. அபார திறமை... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் uncle..இந்த கமெண்ட் களில் unknown நு வருகிறதே அவங்க பெயரில் வர என்ன செய்யணும்னு நீங்க இன்னும் எனக்குச் சொல்லித்தரலை uncle.
      உங்க blog spot ல திருக்குறள் விளக்கங்கள் அருமை..என் friend s க்கு link அனுப்பி படிக்க வச்சேன்...ஏய்...சூப்பர் டீ நு அனுப்பிருக்கா...uncle

      Delete
  8. சித்திரம்பேசுதடி. சூர்யா அருமை

    ReplyDelete
  9. இன்னும் நிறைய சித்திரங்களைப்.பேச வைப்பேன்..( நீங்களும் பெயர் சொல்லலை..நான் எப்படி தெரிஞ்சுக்குவேன்??)

    ReplyDelete
  10. இன்று சூர்ய கிரகணம் நல்லா பிரார்த்தனை பண்ணு..உனக்கு பென்சில் கிடைக்கும்..புத்தகங்கள் கிடைக்கும்..ஆனா நான் வாங்கித் தரமாட்டேன்...உனக்கு செலவுக்குக் கொடுக்கிற காசில வேணா மிச்சம் பண்ணி வாங்கிக்கோ...

    மற்றபடி கட்டுரை நல்லாருக்கு...

    இன்னும் இன்னும் கூட உன் எழுத்துத் திறமை மிளிரலாம்

    ReplyDelete
  11. புலிக்கு பிறந்தது, மீன் குஞ்சுக்கு நீச்சல் இதெல்லாம் காலத்துக்கும் சொல்லும் பழமொழிதான்
    நடச்த்திரங்கள் குட்டி குட்டியா தெரிஞ்சாலும் ஒன்னொன்னும் சூரியனைவிட பல மடங்கு பிரகாசமானதுனு கேள்விப்பட்டுருக்கேன் இந்தக் குட்டிப்புள்ளையும் அப்படித்தான் பல திறமைகளையும் உள்ள வச்சிருக்கு வாழ்த்துக்கள் கட்டுரைக்கும் ஓவியத்திற்கும்.

    ReplyDelete