Thursday 12 November 2015

விட்டாச்சு லீவு...

கோலாம்பஸ் கோலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக்கண்டு பிடிச்சுக்  கொண்டா ஒரு தீவு. என்று துள்ளிக் குதித்து ஓடி வந்தேன் வீட்டுக்கு.. இது நடந்தது நான் பத்தாம் வகுப்பு முடித்ததும்...அப்பப்பாஎன்ன டார்ச்சர். அப்போ படி. இப்போ படி...அதைப் படி..இதைப்படி..இப்படி படி...அப்படி படி...என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி சொல்லி என்ன ரகளை பண்ணாங்க...( இவ்ளோ கெடு பிடிலயும் நான் வழக்கம் போல் கதை, கட்டுரை புத்தகங்கள் தான் படித்தேன் என்பது வேறு விஷயம்) ஆனா இனி ஒரு மூணு மாசத்துக்கு எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல..அதான் இந்த சந்தோஷம்...

எனக்குள் அவ்வளவு திட்டங்கள் வைத்திருந்தேன்..அப்பாவை சிங்கப்பூர் கூட்டிப் போகச் சொல்லணும். அந்தமான் அம்மா மட்டும் போய் வந்துட்டாங்க...நான் போகணும். தீவு என்றால் எப்படி இருக்கும்? நான்கு பக்கங்களிலும் கடல் தண்ணீட்...தண்ணீர்...எவ்வளவு ஜாலி...என்று நினைத்து தான் கற்பனைகள் பற்பல கோட்டை கட்டி வைத்திருந்தேன்.

அக்காவின் மேற்படிப்பு, எனது எதிர்காலம் என்று சென்னை வர வேண்டும் என்று வீட்டில் கலந்தாலோசிக்கப்பட்டது. என்னைச் சின்னவள் என்று தவிர்த்து அக்காவின் வேண்டுகோளின் படி( எனக்குத் தெரியும் சத்தியமா அது கட்டளை..ஆணை...உத்தரவு....ஆனா சொன்னா நம்பவா போறீங்க??) சென்னை போவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்புறம் என்ன என் கனவு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

நானும் சென்னைக்கு அழைத்து வரப் பட்டேன்...( இல்லை இழுத்து வரப் பட்டேன்) அக்கா..ஏய்...இங்கே புது ஸ்கூல் அங்கே மாதிரி இங்கே தெரிஞ்சவுங்க கிடையாது. நம்மைப் பற்றி நம் ஊரில் தெரியும். ஆனால் இந்த ஊருக்கு நிரூபிக்கணும் அதனால் ஒரு நான்கு ஸ்கூலுக்காவது நீ நுழைவுத் தேர்வு எழுதணும்...அதற்குப் படி என்று சொன்ன கையோடு அவளுடைய புத்தகங்கள் எடுத்து வந்து எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்..

வீட்டில் இவள் தான் ஆட்சியரின் அதிகாரங்களை ஒட்டு மொத்தமாய்ப் பெற்றவள் என்பதால், அம்மாவும் அப்பாவும் ஆமாம்டா..அக்கா சொல்படி கேட்டு அக்காட்ட படிச்சுக்கோ..என்று சொல்லி விட மீண்டும்....(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

(ஆனா இப்படி கதை புத்தகங்கள் படிச்சே..478 மார்க் வாங்குன நான் முழுமையா படிச்சிருந்தா, இன்னும் கொஞ்சம் அக்கா மாதிரி அதிகம் வாங்கி இருக்கலாம்.அது வேறு விஷயம்)

அடிக்கடி எனக்கு என் பொம்மைகளோடு பேசும் பழக்கம் உண்டு. ஏனென்றால் அது தான் எதிர்த்துப் பேசாது. அடிக்காது, தண்டிக்காது. கண்டிக்காது. டூ விடாது. சொன்னதை வேறு ஒருவரிடம் வேறு மாதிரி சொல்லிப்,  போட்டுக் கொடுக்காது. இப்படி பல வசதிகள் கொண்டதால் நான் அவைகளிடம் பேசிக் கொண்டிருப்பேன். ( என்னாது..? அவைதான் திருப்பி பேசாதுல்ல..என்று கேட்டால் அதற்காகவும் தான் அவைகளுடன் நான் பேசுவேன்)

அப்படி சிந்து என்று பெயர் கொண்ட பொம்மையிடம் புலம்பித் தீர்த்தேன். அப்பா, தீவுக்குக் கூட்டிப் போங்கள் என்றால் நட்பு இல்லாத ஒரு தீவுக்குக் கொண்டு வந்து விட்டுப் போறார்னு சொன்னேன். அது எதுவும் கடவுளிடம் சொன்னதோ என்னவோ,

 நேற்று மழை..மழை...மழை...இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றால் , அம்மாவும் அப்பாவும் இந்த வீடு வாடகைக்குப் பிடித்து, அக்காவுக்கு கட்டணம் கட்டி, எனக்கும் கட்டணம் கட்டி, பாவம் என்று நானே அந்தத் திட்டத்தை மறந்து விட்டேன். ஆனால் பாருங்க...நான் தீவு போகணும்னு சொன்னேன்ல...இன்னைக்கு தீவே எங்க வீட்டு பக்கத்துல வந்திருச்சு. வீடு சுத்தியும் தண்ணீர்..தண்ணீர்.. தீவுக்குப் போயிருந்தால் ஒரு கப்பலில் தான் போயிருக்க முடியும். இன்று என்னைப் போன்றவர்களால் இன்று இந்த நகர் முழுவதும் கப்பல்கள்..காகிதத்தில்.

காகிதங்களைக் கப்பலாக உருவகமாக்கியதால்...வழக்கம் போல் இதுவும் தத்துவம் தாங்க...


9 comments:

  1. மதிப்பெண் எதற்கு...? திறமை நிறைய இருக்கு... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அங்கிள்...(மதிப்பெண்ணும் வாங்கிக் காட்டுறேன்..பாருங்க அடுத்த வருஷம்..)

      Delete
  2. நானும் குழந்தையானேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி.(கப்பல் செஞ்சு விளையாண்டீஙகளா?)

      Delete
  3. வருண பகவானை அழைத்து உத்தரவு போடுவோம்
    தினமும் மழை பெய்யட்டும்
    சனி மற்றும் ஞாயிறு நீங்கலாக....

    ReplyDelete
  4. உன்னை இழுத்து வந்தோமா? பராசக்தி படம் பாத்தியோ??/உன் நன்மைக்குத் தான் எல்லாம்...( வீட்டில் இருந்த பேப்பர் கிழிச்சு விளையாண்டு விட்டு விட்டாச்சு லிவுனு பதிவு வேறா????

    ReplyDelete
  5. தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...

    இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html

    நன்றி...

    ReplyDelete
  6. காகிதக்கப்பல் எனக்கும் பிடிக்கும்.. மழை பெய்தால் பசங்களைக் கப்பல் விட நான் தான் அழைப்பேன் :-)

    பலமான மழையா இருக்கே, take care.

    உன்னைவிட பத்து மதிப்பெண் குறைவு எனக்கு. மதிப்பெண் என்னடா மதிப்பெண், உன் அறிவும் சமத்தும் ஒளிர்கிறதே, வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அது என்னமோ.. மழைக்கும் உனக்கும் விட்ட குறை தொட்ட குறை இருக்கு போல..

    ReplyDelete