Friday 13 November 2015

கடவுளைக் கண்டேன்

1. பள்ளிகளில் மதிய நேரத்திற்குப் பிறகு பள்ளி புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும்.

2.எல்லோர் வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும்.

3.5ம் வகுப்பு முதல் அனைவருக்கும் பள்ளியே ஒரு மடிக்கணினி தந்து இணைய இணைப்பும் தர வேண்டும்..( வலை தளங்கள் படிக்கத் தான்..ஹி..ஹி..)

4. யார் யாருக்கு எந்த எந்த துறை பிடிக்கிறதோ அந்த அந்த துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும்.

5. அனைத்து நாடுகளுக்கும் பள்ளியிலிருந்தே அழைத்துச் செல்ல வேண்டும்.(செலவு அரசு செய்ய வேண்டும்..மிக்ஸி கிரைண்டர் கொடுப்பதற்கு பதில் இதனைச் செய்யலாம்)

6. வாரம் ஒரு சினிமா கூட்டிப் போக வேண்டும். ( மரத்தைச் சுத்தி சுத்தி பாடும் காதல் படங்கள் அல்லாமல் பயங்கர திரில்லர்.அட்வெஞ்சர் அப்படி இருக்க வேண்டும்.

7. பத்தாம் வகுப்புக்கு மேல் கார் ஓட்ட, பைக் ஓட்ட, விமானம் ஓட்ட என்று அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டக் கற்றுத் தர வேண்டும்..( இந்த செலவும் அரசின் உடையதே...அதான் நிறைய டாஸ்மாக் ல வருமானம் வருதில்ல)

8. பாடகர்கள், ஞானிகள், கலைஞர்கள், தொழிலதிபர்கள், வாழ்வில் வெற்றி பெற்றோர்களோடு நாங்கள் உரையாட, வழிவகை செய்ய வே\ண்டும்.

9.நான் நினைப்பதெல்லாம் எனக்குச் சாப்பிடக் கிடைக்க வேண்டும்.

10. வீட்டுக்கு வந்ததும் அம்மா, அக்கா, அப்பா, மூவரும் என்னோடு இருக்க வேண்டும்

***************************************************************************

கில்லர்ஜி அங்கிள் யாரையும் எனக்கு இணைக்கத் தெரியவில்லை. அப்படியே நான் இணைத்தாலும் என் வேண்டுகோளுக்கே காது கொடுத்து கேட்க மாட்டாங்க...அப்புறம் கட்டளைக்கு....அதனால் நான் யாரையும் இணைக்க வில்லை...( ஏதோ பச்சைப் புள்ள எழுதுது நு வந்து பாக்குறாங்க..அவ்ளோதான்...)

நன்றி...

கோர்த்து விட்ட அப்பாவுக்கு....

நற...நற....( நன்றினு சொல்ல வந்தேன்)

**********************************************************************************

7 comments:

  1. குழந்தாய் நான் தான் கடவுள் உன் ஆசைகளை கேட்க வந்து இருக்கிறேன்

    // பள்ளிகளில் மதிய நேரத்திற்குப் பிறகு பள்ளி புத்தகங்கள் அல்லாத புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும்.//

    இந்த ஆசை நிறைவேற உன் தலைமை ஆசிரியருக்கு அறிவுருத்துகிறேன். தலைமை ஆசிரியரே இந்த குழந்தையின் ஆசை நிறைவேற மதிய நேரம் என்பதை நான்கு மணி என அறிவித்துவிடுங்கள்.. அதன் பின் புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்


    ///
    2.எல்லோர் வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும்.///

    பதிவர்களே நீங்கள் வெளியிட்ட புத்தகத்தின் ஒரு பிரதியை இந்த குழந்தைக்கு அனுப்பி வையுங்கள் அவள் ஆசை நிறைவேற...

    ///5ம் வகுப்பு முதல் அனைவருக்கும் பள்ளியே ஒரு மடிக்கணினி தந்து இணைய இணைப்பும் தர வேண்டும்//

    குழந்தாய் பேசாமல் என் வீட்டிற்கு வந்துவிடு.

    //யார் யாருக்கு எந்த எந்த துறை பிடிக்கிறதோ அந்த அந்த துறை சார்ந்த படிப்பை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும்.//

    குழந்தாய் இந்த செய்தியை உன் தகப்பனாரின் காதில் போட்டு தலையில் ஒரு அடி அடித்துவிடு

    ReplyDelete
  2. மீதி ஆசைகளுக்கான பதிலை பிறகு வந்து சொல்ல்கிறேன் இப்ப வேலைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது...

    இப்படி பதிவு எழுத உனக்கு அனுமதி கொடுத்த உன் அப்பாவிற்கு ஒரு அன்பான முத்தம் கொடுத்துவிடு அதைவிட சந்தோஷம் உன் அப்பாவிற்கு ஏதும் கிடையாது

    ReplyDelete
  3. இளம்புயலின் ஆசைகள் அருமையாய் இருக்கிறதே!
    முதல் நான்கிற்கு நீ இங்கு வந்துவிடம்மா. இனிய ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள் சூரியா. 6,9, 10 ஐ சுவாதியும் செல்வா சகோவும் கவனிக்கவும் :-)

    ReplyDelete
  4. சின்னவரின் 10 வது ஆசையினை நண்பரும்,சகோதரியும் உடனே கவனிக்கட்டும்
    நன்றி

    ReplyDelete
  5. ஐந்தாவது ஆசை ஓவர்தான் இருந்தாலும் இலவசத்துக்கு செய்யிற வெட்டிச்செலவை இப்படி செய்தாலும் பிரயோஜனம்தான்.

    பத்தாவது மிகவும் சிறப்பு

    நன்றி ஏஞ்சல் ராகசூர்யா
    மாமா கில்லர்ஜி

    ReplyDelete
  6. Harrah's Philadelphia Casino & Racetrack - Mapyro
    Harrah's Philadelphia 파주 출장마사지 Casino 광주광역 출장샵 & Racetrack - Find addresses, read reviews and find the 의정부 출장샵 best deal 순천 출장마사지 for Harrah's Philadelphia in 문경 출장샵 Chester, PA.

    ReplyDelete