Tuesday, 29 December 2015

நான் தான்...இது நான் தான்

இதுவரை நான் படித்த பள்ளிகளில் எல்லா விழாக்களும் நடக்கும். எல்லா விழாக்களிலும் என் பங்களிப்பு இருக்கும்..

எப்படி?

என் வெள்ளை நிறம், அல்லது புற அழகு மட்டுமே எடை பார்க்கப் பட்டு அலங்கார பதுமை போல், நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் பெரிய முக்கியப் புள்ளிகளுக்கு பள்ளி முதல் வர் அல்லது தாளாளர் கொடுக்க வேண்டிய நினைவுப் பரிசுகள், மாணவர்களுகான பரிசுகளை மேடைக்கு அழகான ஒரு டிரேயில் வைத்து எடுத்துச் செல்வேன்..

அல்லது வரவேற்பு கொடுக்க ஒரு பூச்செண்டுடன் நிற்க வைக்கப்படுவேன்`

சில ஆண்டுகளில் நான் இந்த ஆண்டு விழாக்களையும் என் பதுமை வேஷத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்தேன்.

இந்தப் பள்ளிக்கு வந்தபின் முதலில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன்..பேச்சுக்கான கருத்துக்களை நானே தான் தயாரித்தேன்.கொஞ்சம் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் என் உழைப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்(.அம்மா தலைப்பு கேட்ட உடன் எழுதித்தந்ததை இன்னும் நான் பார்க்கவில்லை.)அதில் முதல் சுற்றில் தேர்வு பெற்றேன். இரண்டாம் சுற்றில் பசி மயக்கத்தால் இழந்தேன்..( உண்மைக்காரணம் அது தான். என் கருத்துக்கள் பெரியவர்கள் எழுதித் தந்து மனப்பாடம் செய்யப் பட்டு வந்ததை விட நன்றாக இருந்ததாக அம்மாவிடமே அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் தெரிவித்தார்.)

அதன் பின் என் தமிழ் இவர்களுக்குப் பிடித்துப் போக பேச்சுப் போட்டி அல்லது பேச்சு என்றாலே கூப்பிடு ராகசூர்யாவை என்ற அளவுக்கு உடனடியாக தயாரிக்க ஆரம்பித்தேன். (அப்துல் கலாம் அய்யாவிற்கு நினைவஞ்சலி கூட்டத்தில் உடனடியாக தயாரித்துப் பேசியது தான் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட பாராட்டு. அதில் நான் தேர்வாகவில்லை என்றாலும் அது உடனடியாக ( காலை 10 க்கு சொல்லப்பட்டு 11 மணிக்கு மேடையில் நிறுத்தப்பட்டேன்)

 என் கருத்துக்கள் நன்று என்றாலும் நயம், அன்றைக்கு கலந்து கொண்டோர்களோடு ஒப்பிடும் போது நான் சுமார்தான் என்றாலும் எல்லோருக்கும் தயாரித்தது தாத்தா, அப்பா, அம்மா, என்று பல பெரியவர்கள். ( முதல் நாளே தெரிவித்திருந்தும் நான் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்க என் வகுப்பு ஆசிரியரின் கட்டாயத்தால் கலந்து கொண்டேன்.)

என் திறமைக்காக நான் மேடை ஏற வேண்டும் என்று நினைத்தது நடந்திருக்கிறது..

என் பள்ளியின்( SPORTS DAY ) விளையாட்டு தினத்தில், பிரம்மபுத்திரா அணியின் நிகழ்ச்சி தொகுப்பு நான் தான். இப்போதும் எனக்கு கருப்பு நிறச் சுடிதார் கொஞ்சம் கிராண்டாக அணிந்து வரச் சொல்லப்பட்டது என்றாலும், இப்போது பிடித்து அதனைச் செய்தேன்..


( முன்பொரு முறை நான் கருப்பு நிற ஆடை அணிந்த போது  கீழே விழுந்து ரத்த காயம் ஏற்பட்டு விட , அதன் பின் கருப்பு நிறம் என்றாலே அம்மா அலறி அடித்து எனக்கு வாங்கவே கூடாது என்று சொல்லி விட, அந்தத் தடையும் அகன்றது, இந்தத் திருநாளில்..)

அந்த விளையாட்டுத் திடல் எங்கும் என் குரல்

அங்கு வந்திருந்த அனைவரின் காதிலும் என் குரல்..அழகிய தமிழில்..

பேச்சாளராக மட்டும் இல்லை. நான் என் எழுத்தாலும் ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்லும் முறையிலும் வெற்றி பெற முடியும் என்றும் உணர்ந்த தருணம் இது...

முயற்சிகள் பலிக்க வேண்டும் என்பதை விட என் முடிவுகளில் நானாகவே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்..அவ்வாறே நடக்க உங்கள் வாழ்த்தையும் ஆசியையும் தாங்களேன்.( மற்றதை நானே பார்த்துக் கொள்கிறேன்.)
****************************************************************************


இங்கு நான் சக்தியின் தங்கை இல்லை..

எந்தத் தோழியும் என்னை நீ சக்தி தங்கையா எனக் கேட்பதில்லை.

நீ கவிஞர் சுவாதி பொண்ணா?? என்று எந்த ஆசிரியரும் கேட்கவில்லை.

எனவே இந்தப் புகழ் எல்லாம் என் முயற்சியினால் மட்டுமே விளைந்தது..எல்லாப் புகழும் சூர்யாவுக்கே...சரி..சரி இறைவனுக்கே)

இவர்கள் எனக்கு அன்பானவர்களாக இருக்கலாம்.என் வாழ்வின் அங்கமானவர்களாக இருக்கலாம்.

.ஆனால் எனது அடையாளமே இவர்களாக இருக்கக்கூடாது..அப்படித்தானே????

இங்கு என் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. நான் நானாக பாவிக்கப் பட்டிருக்கிறேன்,
முற்றிலும் இந்த வாய்ப்பு என் கனிவான தமிழ் உச்சரிப்பாலும், கம்பீரமான பேச்சாலும், தெளிவான நடையாலும் கிடைத்தது.( இவ்வள்வும் இருக்கான்னு நீங்க கேட்கிறது புரியுது.  ஏதோ பச்சப்புள்ள சொல்லிட்டுப் போறேனே..)


(முத்துநிலவன் அங்கிள் மன்னிக்க)
**************************************************************************


எனக்குள் நான். ஒரு தத்துவம்...( இது தான் இன்றையத் தத்துவம்)
***********************************************************************

6 comments:

 1. நீ. சுயம்புடா....உன் அப்பா இவநென்று ஊர் சொன்னால் ...வேறொன்றும் வேண்டாம் கண்ணே...

  ReplyDelete
 2. அருமை மருமகளே உனது திறமை மென்மேலும் வளர எமது வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சூர்யா
  மென்மேலும் வளர எனதன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஆஹா! மகிழ்ச்சி சூர்யா! வாழ்த்துகள், மேலும் மேலும் உன் சுயத்தால் உயர!

  ReplyDelete
 5. ஆஹா.. மருமகளே வாழ்த்துக்கள்...
  சுவராஸ்யமான எழுத்து நடை உங்களுக்கு....
  நிறைய எழுதுங்கள்...
  சுயமாய் வளருங்கள்... நன்றி.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் சூர்யா! எந்த அடையாளமும் இல்லாமல் நான் நானாக இருக்க வேண்டும் எனும் உன் தெளிவான முடிவுக்கு என் பாராட்டுகள் நல்லா எழுதுறேம்மா. என் நல்லாசிகள்.

  ReplyDelete