முகங்கள் 999 என்ற தலைப்பிலும்...அம்மாவும் நானும் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்..
முகங்கள் 999 ல் நான் சந்தித்த..பார்த்த..பழகிய...பேச நினைக்கிற..தொடர்பு கொண்ட அனைத்து நபர்களையும் எழுதத் திட்டம் வைத்திருக்கிறேன்..
இந்த சமூகத்தில் அப்பாவையும் மகளை பற்றித்தான் நிறைய கதைகளும் கவிதைகளும் இருக்கிறதே யொழிய அம்மாவுக்கும் மகளுக்குமான தொடர்புகள்..அந்யோன் யம் சொல்லப் படுவதே இல்லை...மேலும் என் உலகம் முற்றிலுமாக என் அம்மாவால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது..(உணர்வு உலகம் சக்தியால் சமைக்கப் பட்டது)எனவே அம்மாவும் நானும் தலைப்பின் கீழ் எனது நேசத்தை..நெருக்கத்தைச் சொல்லலாம் எனத் தோன்றியது..இப்படி இருப்பார்களா ? என்ற கேள்விக்கும் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்ற புரிதலுக்கும் இக்கட்டுரைகள் வழி வகுக்குமென நம்புகிறேன்..
பெருவாரியான எனது தனிமைகள் புத்தகங்களால் செதுக்கப் பட்டவை..அதனாலோ என்னவோ குழந்தைமைப் பருவத்திலேயே எனக்குள் ஒரு முதிர்வான மனநிலை தோன்றி விட்டது..அதோடு..பிற தோழமைகளுடன் சராசரியாய் என்னால் ஒட்ட இயலவில்லை என்பதையும் வெகுநாட்கள் கழித்தே உணர்ந்தேன்..
எங்கேனும் சில அப்பாக்கள் தங்கள் மகள்களை மகிழ்வாய் பேசி..சிரித்து...அழைத்துச் செல்கையில் எனக்குள் பிறக்கும் ஏக்கங்கள்..அப்பாடா நான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் சம்பவத்தில் இருக்கிறேன்..என்று பூமிக்குத் தரை இறங்குவேன்..எனக்குள் தோன்றும் சில எண்ணங்கள்.மாற்றங்கள்.உணர்வுகள்..இன்னபிற செயல்பாடுகள் காரணமாக நான் பிறரிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்..அதே சமயம் நான் என்னை எப்போதும் மேதாவியாய்க் காட்டிக் கொண்டதே இல்லை..ஆசியர்கள் தவறாக சில செய்திகளை போதிக்கும் போதும் இவர்கள் தாங்கள் என்ன பிழை செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள் மன்னியுங்கள் இறைவா என்றும் கூறிக் கொண்டது உண்டு..
எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லும் என் தோழிகளின் அம்மாக்களும்..தொலைக்காட்சி பார்க்கிறான்..நண்பர்களோடு சுற்றுகிறான் என்று ஆசிரியரிடம் புகார் சொல்லும் சில நண்பர்களின் அம்மாக்களையும் கண்டு எனக்கு அயற்சி ஏற்பட்டது ஒரு காரணமென்றால்..பள்ளிப்படிப்பைத் தவிர எங்கள் சிந்தையில் ஏதுமே இருக்கக் கூடாது என்று சொல்லும் ஆசிரியர்களை என்ன சொல்வது??
கண்ணதாசனில் வரிகளாய் ..போற்றுவார் போற்றட்டும்.புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்..எதற்கும் அஞ்சேன்.நில்லேன் என்ற உறுதிமொழியையும் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்..(பிறர் மனம் புண்படாதவாறு தான் சொல்வேன்)
நான் படிக்க வேண்டும் என்று எண்ணியவைகள்.எல்லாம் எனக்குக் கிடைத்திருக்கின்றன..அதற்காக இப்போதே நான் ஞானி என்று சொல்லி பெருமைப் படுவதும் நியாயமில்லை..படித்த புத்தகங்கள் என்னை செதுக்கி இருக்கின்றன்..தொலைக்காட்சி இல்லாத என் வீடு வாசித்தலை மட்டுமே தந்திருக்கிறது..இந்தப் பயிற்சியை பெற முழுக் காரணமும் அம்மாவைத்தான் சாரும்.
எங்களுக்காக வேலையை விடும் துணிச்சல்..கடைகளில் கணக்கெழுதுவது.சைக்கிளில் எங்களை அழைத்து சென்றது.காசே இல்லாத போதும் எங்கள் தேவைகளை நிறைவேற்றியது எல்லாமே அம்மா தான்.அப்பா எங்களோடு இல்லை என்பதை நாங்கள் உணராதிருப்பதற்குக் காரணமும் அம்மா தான்.யாதுமாகி நின்றாள் என்ற வார்த்தை அம்மாவுக்கே பொருந்தும்..
பணத்தேடல்களில் தொலைந்தே போகாமல் குழந்தைகள் அவர்களின் விருப்பங்கள் ஆசைகள்.ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் என்று எவ்வளவு இருக்கிறது என்பதைச் சொல்வனவாகவும் அவை இருக்க வேண்டும்..
சொல்லுமா என்பது சந்தேகம் தான்.ஆனால் சொல்ல வேண்டும் என்பதே எனது ஆசை..
இவற்றில் சில
அழ வைக்கலாம்
தொழ வைக்கலாம்
எழ வைக்கலாம்
விழ வைக்கலாம்
வழக்கம் போல் எனது முயற்சிகளுக்கும்..செயல்பாடுகளுக்கும் உங்களின் ஆசியை வேண்டுகிறேன்..
( பின் குறிப்பு...இன்னும் நீட் தேர்வு தொடங்க இருப்பதால் எனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் அனைவரின் வலைதளத்தையும்.ஒரு சேர படிக்க இயலவில்லை...படித்து விட்டு வெறுமனே அருமை.நன்று.வாழ்க..என்ற பின்னூட்டங்களை மட்டுமே என்னால் எழுத இயலாது..ஏதேனும் சொல்லவும் கேட்கவும் நினைக்கிறேன்..நீங்கள் எல்லோரும் என் உறவினர்கள் என்ற முறையில்..அதனால் சற்று கால தாமதம் ஆகிறது...மன்னியுங்கள்)
நிலவன் அங்கிளுக்கு மட்டும் இது...இது முற்றிலும் தமிழாக...பிற மொழிச் சொல் கலவாமல் இருக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்க இயலாது..ஏனெனில் தேவை கருதி கலப்பேன்..

This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசூர்யா...
ReplyDeleteசுடர்விடு.
இந்த உலகில் நான் உனக்கு மட்டும் தான் பயப்படுகிறேன்..
ஆனால் இருவருக்கும் தெரியும் அது பயமல்ல வென..
டக்கென தெரிக்கும் உன் வார்த்தைப் பிரயோகங்கள் அனலாய் இருக்கிறது...
அன்பு செய்..
நான் அன்பு செய்கிறேன்
.....சூர்யா...அம்மா பெண்ணும் அன்யோன்யம் பற்றியும் பேசப்படுவதுண்டு....கவிதைகள் உண்டு..கதைகள் உண்டு.....ஆனால் அம்மா மகன் உறவு தான் பேசப்படுவதில்லை...
ReplyDeleteகீதா
...எழுதுங்கள் சூர்யா..நாங்கள் காத்திருக்கிறோம்...வாழ்த்துகள்!
ReplyDeleteநேற்று இது அடித்து கருத்து போகவே இல்லை....சூர்யா உங்கள் எழுத்து நடை அழகாக கவித்துவமாகக் கவர்கிறது. எழுதுங்கள் உங்கள் உணர்வுகளை... எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது...இந்தக் சிறிய வயதிலேயே....புலிகளுக்குப் பிறந்தது பூனையாகுமா....காத்திருக்கிறோம்...எழுதுங்கள் வாழ்த்துகள்...
Deleteகீதா
இந்த பதிவு மனதை நெகிழ வைக்கிறது ஒரு சிறு குழந்தை தன் மன உணர்வுகளை அழகாக செதுக்கி யாரையும் காயப்படுத்தாமல் சொல்லி சென்று இருக்கிறது என்பதை பார்க்கும் போது இந்த வயதிலே அது மிகவும் மனமுதிர்ச்சி அடைந்தது புரிகிறது.......
ReplyDelete
ReplyDeleteபெரியவர்கள் செய்யும் தவறுகளில் இருந்துதான் சிறுவர்கள் பாடம் கற்று கொள்ள முடியும் என் தந்தை செய்த பல தவறுகளினால்தான் நான் பல பாடங்களை கற்று அந்த தவறுகளை செய்யாமல் என் குழந்தை மற்றும் மனைவியின் மீது அன்பு செலுத்தி கவனித்து கொள்கிறேன் பூரிக்கட்டையால் மனைவியிடம் அடி வாங்குகிறேன் என்று என்னை நான் கேலி செய்து கொண்டாலும் ப்ராக்டிக்கல் வாழ்க்கையில் அப்ப்டி இல்லாமல் நல்ல கணவனாக அப்பாவாக நல்ல நண்பனாக இருந்து வருகிறேன் இப்படி நான் இருக்க காரணம் என் தந்தை செய்த தவறுகள்தான் அதனால்தான் என்னவோ சில மாதங்களுக்கு முன் தந்தை இறந்தாலும் இந்தியா வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை
அழகாகச் சொல்ல வருகிறது உங்களுக்கு. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
Thagathai uarasi paarkava vendum? uanarvu ualagam sakthiyaal samaiyakapatathu : ithu ena tirupathi payanathil kiditha nenamoo? tirantha puthagam padika aaval ! ! thodurugal. . .
ReplyDeleteநல்ல தலைப்பு டா சூரியா.அப்பா மகளுக்கு உண்டான உறவை மட்டுமே எழுதி வரும் இந்நிலையில் அம்மா மகளுக்கும் உண்டான அன்பை இந்த உலகிற்கு தெரியவிருக்கும் உன் எண்ணங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் டா செல்லம்.
ReplyDeleteOru aanin kashtangalum, uzhaipum periya alavil pesa padadhu enbadhu unmai dhan. Un vishayathilum adhuve arangeriyulladhu. "Chinnaval" puthagam un asaivugalai miga miga thulliyamaga rasitha, nesikkum oru appavin unarvugalin kannaadi. Appa yedhartha ezhuthu nadaiyil, ammavin gnanamum kalandhu pisaindha thigattadha inipu palagaram un ezhuthu. Pirandha naal vazhthil kooda azhagaga solliyirundaay. Ippodhu appadiye matri vittay. Pillaigalukana gunam idhu dhan. Idhaiyum anbu seigirar un appa. Unmaiyil azhagana kudumbam. Poramai kolgiren....Vazhthukkal un ezhuthukkalukku.
ReplyDeleteஒரு ஆணின் கஷ்டங்களும், உழைப்பும் பெரிய அளவில் பேசப்படாது என்பது உண்மைதான். உன் விஷயத்திலும் அதுவே அரங்கேறியுள்ளது. "சின்னவள்" புத்தகம் உன் அசைவுகளை மிகமிகத் துல்லியமாக ரசித்த, நேசிக்கும் ஒரு அப்பாவின் உணர்வுகளின் கண்ணாடி. அப்பா யதார்த்த எழுத்து நடையில், அம்மாவின் ஞானமும் கலந்து பிசைந்த இனப்புப் பலகாரம் உன் எழுத்து. பிறந்தநாள் வாழ்த்தில் கூட அழகாகச் சொல்லியிருந்தாய். இப்போது அப்படியே மாற்றிவிட்டாய். பிள்ளைகளுக்கான குணம் இதுதான். இதையும் அன்புசெய்கிறார் உன் அப்பா. உண்மையில் அழகான குடும்பம். பொறாமைகொள்கிறேன். ....வாழ்த்துக்கள் உன் எழுத்துக்களுக்கு.
ReplyDeleteஅவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வேறு இடத்தில் வாழ்கிறார் என்பதும் கவிதையில் மட்டுமே சின்னவள். வாழ்க்கையில் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
Deleteரசிக்க காத்திருக்கிறேன்...
ReplyDelete