Thursday 27 December 2018

நட்சத்திரம்

* இப்போதெல்லாம்.ஒரு பொருளைப் பார்த்தால் பல எண்ணங்கள் கோர்த்துக் கொள்கின்றன.( நான் வளர்ந்து விட்டேன் தானே)

* எதிர் வீட்டு வாசல் நட்சத்திரம்.சூடி இருந்தது.முன்னெல்லாம் அம்மா டிசம்பர் மாதங்களில் வாசலில் எங்கள் வீட்டிலும் " ஸ்டார் லைட்" போடுவாள்.அது எனக்காக.என் தோழிகளிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக..அல்லது நான் S.F.S பள்ளியில் படித்ததன் காரணமாக...அல்லது எதிர் வீட்டு அம்மாச்சி மற்றும் தாத்தாவுக்காக...

ஆனால் நான் சொல்லித்தான் அது அரங்கேறியது.( வீட்ல சின்னப் பிள்ளைங்க பேச்சை எங்க பாஸ் கேக்குறாங்க???..ஆனா நாங்க சின்னதா ஒரே ஒரு சேட்டை அல்லது குறும்பு  பண்ணட்டும்...அதுக்கு மட்டும் ஆயிரம் வாய் இருக்கும்...அம்பத்தியோரு திசை இருக்கும்..( இந்த அம்பத்தியோரு திசைங்கிற வார்த்தைய நானா கண்டுபிடிச்சேன் பாஸ்.) ..( என் புலம்பல் என்னோட இருக்கட்டும்))

ஆரோக்கியசாமி Father.
---------------------------------
என் பள்ளியின் முன்னால்.முதல்வர்.கலகலப்பானவர்.ஆனா கண்டிப்பானவர். டிசம்பர் மாதங்களில் அவர் முகமும்.மனமும் அதிக பிரகாசமாயிருக்கும்."உம்" என்று குழந்தைகள்.இருந்தால் உடனே ஒரு சாக்லேட் கிடைக்கும்.(பல தடவை வருத்தப்பட்டது மாதிரி இருந்து சாக்லேட் வாங்கி இருக்கேன்நா பாருங்க..)

திடீரென்று மஞ்சள் காமாலை வந்து இறந்து போனார்.ஆனாலும்.எங்களோடு கல்விச் சுற்றுலா வந்த போது..எழுந்து..எழுந்து ஆடியதும்..வெள்ளை ஆடையும்..பளிச் என்ற சிரிப்பும் தான் நினைவுக்கு வருகிறது..

அந்நாட்களில் குழந்தைகளான எங்கள் மனங்களில் அவர் தான் ஸ்டார்..

தன் அறை வாசலிலும் ஒரு ஸ்டார் கட்டச் சொன்னவர்.

அம்மாச்சி
---------------------

அவரவர் வேலை விட்டு வீடு வந்த பின் வாசல் கதவை இறுகச் சாத்திக் கொள்வது போல் இருக்க முடியாது புதுக்கோட்டையில் இருக்கும் போது....எதிர் வீட்டின் அம்மாச்சி,,( அம்மாச்சி என்று அழைப்போம்.பெயர் தெரியாது..தாத்தா பெயர் ஆரோக்கிய சாமி..கம்யூனிசவாதி..)
குட்டிகளா...என்னடி ..சுவாதி இல்லையா???என்னடி சாப்டீங்க?? என்று கேட்டு நேரே எங்கள் வீட்டின் அடுப்படிக்கே வந்து வத்தல் குழம்பு..அல்லது.ஃப்ரைட் ரைஸ்..செய்து கொடுத்து விட்டுப் போகும் அவர் மகள்..எனக்கு வைரம்ஸ் பள்ளியில் ஆசிரியர் ( பள்ளியில் மிஸ் என்றும் வீடு வந்ததும் ஆண்ட்டி என்றும் அழைப்பது வழக்கம்). அந்த அம்மாச்சிக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும்.எங்கள் வீட்டில் ஸ்டார் லைட் போடுவதை ஒரு வித ரசனையோடு பார்ப்பார்.அம்மாச்சியின் அன்புக்கு மனசு இப்போதும் ஏங்குது..

அந்தோணி ஞானசேகரன்
-----------------------------
கிறிஸ்மஸ் அன்று பல வித ஸ்வீட்.கார வகைகளுடன் வந்து அம்மாவிடம் மட்டுமல்லாது எங்களிடமும் பணிவாக வழங்கிவிட்டுச் செல்லும் அம்மாவின் அஸிஸ்டண்ட்.( இவரைப் பற்றி வேறு ஏதும் தெரியாது என்பதால் நிறுத்துகிறேன்) எங்கள் வீட்டில் இருக்கும் ஸ்டாரைப் பார்த்து மகிழ்ச்சியாகப் பார்த்துச் செல்வார்..

சத்தியநாதன்
---------------------------
அம்மாவின் பல.தம்பிகளில் இவரும் ஒருவர்.ஒரு கிறிஸ்மஸ் க்கு அறந்தாங்கி அருகே இருக்கும் இவர் வீட்டுக்குப் போனோம்.அனிட்டா சித்தி..சத்திமாமா..அம்மாச்சி..தாத்தா..எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும்.( இந்த அம்மாவை யாருக்குத்தான் பிடிக்காது?? சுவாதி என்றால் அழகு- அறிவு-ஆற்றல் என்றே பொருள் கொள்க)
எங்கள் வீட்டின் ஸ்டார் லைட் இருந்ததைப் பார்த்துத்தான் இந்த மாமா எங்களுக்கு அறிமுகம்

எபின் Father
-------------------------------
புதுக்கோட்டையில் அம்மாவின் செல்வாக்கு அதிகம்.என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் என்னை கவிஞர் சுவாதி பொண்ணு..சுவாதி டீச்சர் பொண்ணு என்றே அழைப்பர்.பள்ளியில் சக்தியின் செல்வாக்கு அதிகம் என்பதால் மாணவர்கள்..மற்றும் அம்மாவை அறியாத சில ஆசிரியர்களும் என்னை சக்தி தங்கச்சி என்றே அழைப்பர்.அந்த அடையாளம்.தான்.எனக்கு.வகுப்பில் கிளாஸ் எடுக்க வரும் ஆசிரியர்கள் கூட என்னைக் கூப்பிட வேண்டுமென்றால் சக்தி சிஸ்டர் என்று கூப்பிட்டு ஆயிரம் தடவை என் பெயர் என்ன என்று கேட்டு விட்டு..அதே ஆயிரம் தடவை நான் ராகசூர்யா என்று சொல்லும்.போது"ம்" என்று கேட்டுவிட்டு மீண்டும் அடுத்த முறை சக்தி சிஸ்டர் என்றே அழைப்பார்கள்.இதில் சிலர் கொஞ்சம் ஓவராக..உங்க அக்கா மாதிரி நல்லாப் படிக்கணும்.சரியா என்று அட்வைஸுவார்கள்..அப்பல்லாம் தமிழ் படங்கள் .ல்ல..சுவத்துல உதைச்சு சண்டை போடுற விஜய் காந்த் மாதிரி...ஸ்டைலா பந்தாடுற ரஜினி மாதிரி..ஹிந்தில பறந்து பறந்து அடிக்கிற ஹிருத்திக் ரோஷன் மாதிரி...பார்த்துப் பார்த்து விலாசுற..சல்மான் கான் மாதிரி..இங்லிஷ் படங்கள் ல வர மறைஞ்சு மறைஞ்சு அடிக்கிற  Arnold மாதிரி.போட்டுத் தள்ற Jet li மாதிரி..Jean..Jakiechan..Jason..Keanu..Mark wahlbery. எல்லோருமாக நின்று அவர்களை துவம்சம் செய்வேன் கற்பனையில்)

ஆனால் முதன் முறையாக சக்தியை ராக சூர்யா சிஸ்டர் என்பதோடு மட்டுமல்லாமல்.என் record note.எனது exam papers எல்லாம் model  ஆக பிறருக்குக் காட்டுபவர். ஆசிரியர்கள் வகுப்புக்கு வரவில்லை என்றால் நாங்கள் பிரின்சிபால் அறையில் அமர்ந்திருக்கும் இவரைப் போய் பார்த்து,,அவர் அருகில் இருக்கும் பிரிட்ஜைத் திறந்து,,சாக்லேட் எடுத்து சாப்பிடும் உரிமை வரை தந்திருந்தார்.படிக்காத மாணவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாப் படி என்பார்.( அடிக்காம திட்டாம..குணமா சொல்வார்)
பள்ளியில் மேலே ஏறி ஸ்டார் கட்டுவது இவர் தான். ஸ்டார் எரியும் போது வானத்திலிருந்து ஒன்றைப் பறிச்சு எடுத்து வந்து ஸ்கூல்ல வச்சது மாதிரியே சந்தோஷமப் பார்ப்பார்..

அருள் பிரான்சிஸ்Father
------------------------------------
சக்தியின் மேல் பாசமும் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசமும் கொண்டவர்..வெள்ளை அல்லது சில்வர் கலர் ஸ்டார் தான் இவருக்குப் பிடிக்கும்..மற்றவைகளை அழகாய் இல்லை என்பார்..இவர் தான் பிரின்சிபால்..

அப்புறம் சண்டை போடும்.ஜெரோமி சித்திகா...பேசவே பேசாத ஆஷா மிருணாளினி,, இன்னோவாவில் வரும் கிறிஸ்டி,,எல்லாக் கேக்கிலும் முட்டை கலப்பார்கள் என்று சொல்லி பயமுறுத்தி அழவைத்த டீனா,,உட்கார்ந்தால்,,நின்றால்,,பேசினால்,,இயேசப்பா என்று சொல்லும் தேஜா ஸ்ரீ..பிறந்த நாள் போலவே லீவ் முடிந்து பள்ளிக்கு வரும் போது எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கும் ஜஸ்வின் மனோகர்..இப்படியாக எல்லோரும் என் நினைவில் வந்து போகிறார்கள்..

அப்போதெல்லாம் நான் இந்து, என்றும் எனக்குத் தெரியாது.அவர்கள் கிறிஸ்டியன் என்றும் எனக்குத் தெரியாது.என்னைப் பொருத்தவரை அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்.நாங்கள் சாப்பிடாதவர்கள் அவ்வளவே..

பிரதோஷம் தவறாமல் கோயில் போகும் அம்மா கிறிஸ்மஸ் அன்று எல்லோருக்கும் வாழ்த்து அனுப்பி விட்டு யாரையாவது மிஸ் பண்ணிட்டேனா பாருடி என்று போனை என்னிடம் தந்தாள்.நானும் கூட 10 பேருக்கு அனுப்பினேன்..

இதைப் படிக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

கேள்வி
---------------
வாழ்த்து மட்டும் போதுமா நண்பர்களே...சித்தப்பா சித்திகளே....மாமா அத்தைகளே...????

பின்குறிப்பு 1
-------------------
நிறைய எழுதத் தோன்றுகிறது.ஆனால் ஏதோ அழுத்தம் புறந்தள்ளி விடுகிறது. இனியேனும் தொடர விரும்புகிறேன்.

பின் குறிப்பு 2
---------------------------
ஆமா!!! நான் வந்திட்டேன்னு சொல்லு...திரும்பி வந்துட்டேனு சொல்லு நு வந்த....அப்புறம் காணோம்..என்று யாரோ முணகுறது கேட்குது..

பின்குறிப்பு 3
----------------------------
இந்த ஆண்டு முதல் என்னை "சிறுமி" என்று புறந்தள்ள முடியாது.அதனால் மரியாதையா கமெண்ட் பண்ணிட்டுப் போங்க...

பின் குறிப்பு 4
---------------------------
நன்றி..எழுதுடா...நிறைய்ய எழுது என்று சொன்ன செல்வி ஆண்ட்டிக்கு

பின் குறிப்பு 5
---------------------------
நான் SUPER STAR  மகள் தெரியுமா???

அம்மா பெயர் சுவாதி...அது ஒரு ஸ்டார் ..

அம்மா எப்பவும் எங்களுக்கு super..அதனால் நான் SUPER STAR  மகள் தானே???

பின் குறிப்பு 6
----------------------------
நான் " ராக"சூர்யா" என்பதால்...உலகின் பெரிய ..STAR....நான் தான்...

ஆமாந்தானே?????

18 comments:

 1. //அம்பத்தியோரு திசை இருக்கும்//

  இந்த விடயம் நான் இன்றுதான் அறிந்து கொண்டேன்.

  இன்னும் பெரிய... ஸ்டாராக சக்தியின் சிஸ்டருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்... பேரு என்னமோவுல.. ஆங் ராகசூர்யா பாப்பாவுக்கு சாக்லெட்டோடு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. 1.கில்லர் ஜி uncle க்கு அம்பத்தியொரு திசை அறிமுகப்படுத்திய ராகசூர்யா வாழ்க...வாழ்க...

   2.நீங்களுமா uncle????

   3. இவருக்கும் ஒரு பாயாசத்தை போட்டுர வேண்டியது தான்😁😁

   Delete
  2. கில்லர் ஜி uncle உங்களுக்கு யார் பிடிக்கும்???ஜாக்கிசானா.??? ரஜினி uncle ஆ

   Delete
 2. வாழ்த்துகள் சூர்யா, இனிய பதிவு...ஒவ்வொருவராக நினைவுகூர்ந்து.
  கிறிஸ்துமஸ் வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கிரேஸ் ஆண்ட்டி

   Delete
 3. Replies
  1. ராகசூர்யாவிற்கு அன்பான வாழ்த்துகள்...

   Delete
  2. நன்றி திண்டுக்கல் uncle

   Delete
 4. ஸ்வாதியே நட்சத்திரம்தான ராகசூர்யா எனும் பெரிய ஸ்டாருக்கு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜாகிர் uncle க்கு என் வணக்கமும்.அன்பும்...( அம்மா உங்களை பக்கி நு கூப்பிடுறத நிறுத்த மாட்டேங்குறாங்களே.....அவங்களை திட்டமாட்டேங்குறீங்களே ஏன்???)

   Delete
  2. விடுடா குட்டிமா ஒரு பக்கி இன்னொரு பக்கிய அப்படித்தான் கூப்பிடும் அப்பறம் எனக்கு திட்டவும் தெரியாது

   ஒன்னு செய் நீ வேணா என் சார்பா ஒரு உப்புமா கிண்டி அம்மாவுக்கு குடுத்துடு

   Delete
 5. Neegal ungalai nenaivu paduthiyavidam arumai nanum ninaival palaniyappa nagar sendru vandean. Thank u for sharing your valuable memiries.its v happy to read it. God ll bless u what u need.

  ReplyDelete
  Replies
  1. யார் என்றே தெரியவில்லை.நன்றி...கீழ பெயர் எழுதி இருக்கலாம்

   Delete
 6. நீ தான் நம் வீட்டின் சூப்பர் ஸ்டார்....சூர்யா....இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. Super star சொன்னா...கேட்கணும்...ஆனா நீங்க சொல்றதைல்ல super star கேட்குது...😑

   Delete
  2. Super star சொன்னா...கேட்கணும்...ஆனா நீங்க சொல்றதைல்ல super star கேட்குது...😑

   Delete
 7. Chellathu en vazhthukal one of the best emotional diamond words

  ReplyDelete
 8. Nandri...ungal oeyarai potturunthal mahilchi adanijieruppen

  ReplyDelete