Monday, 2 November 2015

யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்

முதல் நாளெல்லாம் நல்ல மழை...பள்ளிக்குள் இருந்த போது அறிவியலை இன்னும் கொஞ்சம் அறுவையாக்கிக் கொண்டிருந்தார், அதன் ஆசிரியர்.(யை)...(பதவிகளுக்கு பெண்பால் கூடாது என்பதால்)

ஞாயிறின் ஏக்கமும் தூக்கமும் முடியுமுன்பே திங்கள் பிறந்து விட்டது..அடடா..என்று எழுந்து , அவசர அவசரமாக குளித்து, ( குளிப்பது போல் போக்குக் காட்டித்தான்) (நல்ல மழைல யாராவது குளிப்பாங்களா? புரியாத அம்மாவை நினைத்துச் சிரித்துக் கொண்டே) சீருடைக்குள் என்னைத் திணித்து கீழே இறங்கினால் , இன்று கண மழைகாரணமாக விடுமுறை உத்தரவு என்று என் போன்ற பிள்ளைகள் எல்லாம் மழையில் நனைந்து கொண்டே நடந்தும், அப்பாக்களின் பின்னேயும், அம்மாக்களின் பின்னேயும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்...

பூத்ததே எனக்குள் ஒரு மத்தாப்பு....நான்கு புத்தகங்கள் இருக்கு படிக்க..( இவை பள்ளி புத்தகங்கள் என்று நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல) நல்ல கதைகள்...அடடா..இன்று பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே மழையை ரசித்து காப்பி குடித்துக் கொண்டே படித்து முடித்து விட வேண்டியது தான், என்று துள்ளிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்...

திடீரென்று பெரிய இடி...மழை வருவதன் காரணமாக வானத்தில் அது நிகழ்ந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் .., மீண்டும் நான் பொறுப்பல்ல..என் அம்மாவின் வாயின் வழியாக என் இதயத்தைத் தாக்கியது அந்த இடி.

அதான் ஸ்கூல் லீவு விட்டாங்கல்ல,இன்னைக்கு ஏதாச்சும் பலகாரம் பண்ணலாமா? அடுத்த வாரம் தீபாவளி, பாரு வீட்டை , நேத்தே துடைச்சிருக்கணும், அம்மாக்கு முடில. துடைச்சிடு.ன்னு சொல்லிட்டு அடுப்படுக்குள் ஒளிஞ்சுகிட்டாங்க. சரிதான் னுசெஞ்சு முடிச்சிட்டு, படிக்கலாம். ரசிக்கலாம், நு வீடை அழகா கூட்டி, துடைச்சு, பளீர் னு வச்சுட்டு நிமிர்ந்தா, அட ரொம்ப அழகா பண்ணிட்டியே. என் செல்லம்ல,னு சொல்லிட்டு மீண்டும் ஒரு இடி..அப்படியே பாத்ரூமையும் கழுவிடு தங்கம் சொல்லி ஒரு முத்தம் வேறு..( அம்மாக்களின் இந்த முத்தத்திற்கு மயங்காத பிள்ளைகள் உலகத்தில் இருக்கா என்ன?)

பாத்ரூமையும் கழுவிட்டுப் பார்த்தா, கட கட நு மணி ஓடிருச்சு. ஸ்கூல்ல இருந்தா இந்நேரம் விளையாட்டு பிரிவேளை. மழைனாலே வெளில் விடாட்டியும், வகுப்புக்கு யாரும் வர மாட்டாங்க..நாங்க, சினிமா கதை, அந்தக் கதை இந்தக் கதை நு சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்திருப்போம்...
ஆனா இன்னைக்கு?????????

சரி நான் தான் இப்படி இருக்கிறேன்  முதல்ல ஒருத்திக்கு போன் பண்ணேன். அவ வீட்டுல முறுக்கு, அதிரசம் எல்லாம் செஞ்சாங்களாம்..செல்லம், தங்கம், அம்முலு, என்று அம்மாக்கள் சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் சொல்லி அவள் அம்மா அவளையும் வேலை வாங்கியிருப்பது கேட்டு அதிர்ந்து  போனேன். 

அதெல்லாம் முடிச்சுட்டு உஸ் அப்பா நு உட்க்கார்ந்தால், அடுத்த மாசம் வர அரைப் பரிச்சைக்கு படி நு சொன்னா, நடத்தாத பாடத்தை, புரியாமலே எப்படி படிக்கிறது? இது கொடுமையால்ல இருக்குனு இன்னொருத்திக்கு போன் பண்ணேன். எங்கம்மா தேவலாம் போல. அவ அம்மா அடுத்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்ஸாம் ல அதுக்குப் படின்னு சொன்னாங்களாம்..(அங்கும் வேலை வாங்கப் பட்டிருக்கிறது).( அடுத்த வருஷம் வரப் போற பரிட்சைய இப்ப எப்படி படிக்கிறது? யாராச்சும் அவங்களுக்குச் சொல்ல முடியுமா என்ன?)

பிள்ளைகள் அடம் பண்றதும், நினைச்சதை நடத்திக் காட்டுறதும் ராஜா சார் பட்டிமன்றத்துல மட்டும் தான் நடக்கும் போல....

காலைலே மாடிக்குப் போய் மழைய பாத்துட்டு வரலாம் மாடிக்குக் கிளம்பினா மழைல நனையக் கூடாதுனு சொன்னாங்க. மதியம் வேலை முடிச்சுட்டுப் போனா , அய்யோ வெயில் அடிக்குது , இப்ப எதுக்கு மாடிக்குனு சொல்லிட்டாங்க.

இதோட போகும் நினைக்காதீங்க...இன்னைக்கு லீவு விட்டதை இன்னொரு நாள் சனிக்கிழமை ஸ்கூல் வைப்பாங்க...இது அதை விடக் கொடுமை...படிக்க வேண்டிய பாடங்களை ஒழுங்கா படிக்க முடியாது. லீவையும் என்ஜாய் பண்ண முடியாது.


அய்யா மழைக்கு லீவு அறிவிக்கிற கலெக்டர்களே...இனி மேலே பச்சைப் புள்ள மாதிரி மழையைப் பாத்ததும் லீவுனு சொல்லாதீங்க. (அதென்னமோ நீங்க லீவு சொல்ற அன்னைகெல்லாம் சொல்லி வைச்சா மாதிரி வெயில் அடிக்கிது...)

இந்தியச் சட்டங்கள் இயற்றும் போது காஷ்மீர் நீங்கலாக நு சொல்ற  மாதிரி, 10,11,12 வகுப்புகள் நீங்கலாகனு , வேனா சொல்லிக்குங்க...

நன்றிங்க...

( இதுவும் கூட தத்துவம் தாங்க...என் தத்துவம்..ஹி...ஹி...)

********************************************************************************







41 comments:

  1. சூஜ்......எங்கயோ....ம்ம்ம்ம்ம்ம்...கலக்கு....

    ReplyDelete
  2. Replies
    1. எஸ் அங்கிள்....ஆல் கலெக்டர் அங்கிள் ஷுட் நோட் திஸ்

      Delete
  3. உண்மையிலே உங்க நிலைமை ரொம்ப கொடூரமாக இருக்கும் போலயே...... ஐயோ பாவம் நீங்க என்னை மாதிரியே.....
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. ஆமா அங்கிள்...இன்னும் சொல்வேன்

      Delete
  4. உண்மையிலே உங்க நிலைமை ரொம்ப கொடூரமாக இருக்கும் போலயே...... ஐயோ பாவம் நீங்க என்னை மாதிரியே.....
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

    ReplyDelete
  5. ஆகா,
    ஒரு மாணவியின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிகிறது
    மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி,
    ஆசிரியைகள் பள்ளிக்கு வரவேண்டும்,
    மாணவ மாணவிகளுக்கு மட்டும் விடுமுறை
    என்று அறிவிக்கச் சொல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்க...சொல்லுங்க....உங்க பதிவுகளை கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேன்..( கொடுக்கப்படுவதே அரைமணி நேரம் தான்...மின்னல் வேகத்தில் என்னிடமிருந்து கணினி அகற்றப்படும்)

      Delete
  6. அட, இது ரொம்ப கொடுமையா இருக்கே! பள்ளி வச்சுட்டு பாடம் இல்லைன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்ல..படிக்க ஆசைப்படுறத எடுத்துட்டுப் போய் வாசிச்சுட்டு அரட்டையும் அடிச்சுட்டு வந்துடலாம்..
    படிக்க புத்தகங்கள் இருக்குனு சொன்னத சரியாப் புரிஞ்சுகிட்டேன், என் வீட்டுலயும் ஒருத்தர் அப்படி இருக்கிறாரே.. :)
    இது அவரோட தளம், இளைய தலைமுறை போய் பார்த்துக் கருத்து சொல்லுங்க
    http://thesupremeoverlordoftheuniverse.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      கிரேஸ் சூர்யாவை ஊக்குவிங்கள்...

      Delete
    2. கண்டிப்பா சகோ. பிரமாதமா எழுதுகிறாளே
      அவள் சமத்துப்பற்றி சுவாதியின் தளத்தில் வாசித்திருக்கிறேன். வாழ்த்துகள் உங்களுக்கும் சூரியாவிற்கும்

      Delete
    3. ஹையா...வந்துட்டீங்களா...? வாங்க...வாங்க.....அவசியம் போய் பார்க்கிறேன்...அங்கே சந்திப்போம்

      Delete
  7. யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் ராகசூர்யா...இப்படி அருமையாய் இந்த வயசிலே எழுத ஆரம்பிச்சா எங்களை போல உள்ளவர்கள் மூட்டைகட்டிகிட்டு எங்காவது போகவேண்டியதுதான் போல இருக்கிறது... அருமை அருமை......தொடர்ந்து எழுதவும்...பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி....அவளை ஊக்குவிங்கள்.....உங்கள் ஆசிகள் அவளை இன்னும் வளப்படுத்தும்

      Delete
  8. அருமை ராசாத்தி.. சின்னவள் சிலிர்க்கவைத்தாள்... மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட அருமையான பதிவு.
    மதுரை தமிழா.. நீங்க கிளம்பி போகும் அதே வண்டியில் பக்கத்துக்கு சீட்டில் எனக்கும் ஒரு துண்டு போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. அங்கிள் நீங்கள் பிறந்த நாள் விழாவில் சேர் எடுத்துப் போட்டகதையும்( மிஸ்டர் தண்டம்), டொமினிக்குடன் பொண்ணு பார்த்த கதையும் தான் ஓடுகிறது பள்ளியில்....ரசித்தேன்...ரசித்தேன்...ரசித்தேன்

      Delete
  9. லீவ்ல நீ ஜாலியா இருந்தேன்னே நெனச்சேனே


    அய்யோ பாவம்..நல்லவேளை நான் காலேஜ் போய்ட்டேன்...ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. இரு உனக்கு ஒரு நாள்...லீவு வரும்...

      Delete
    2. அவ எப்படியோ தப்பிச்சிருவா...அந்த வித்தை தான் எனக்குத் தெரியலை...(ஆமா எப்போதுமே நீங்க தப்பிக்கிறீங்களே எப்படி?)

      Delete
  10. லீவ்ல நீ ஜாலியா இருந்தேன்னே நெனச்சேனே


    அய்யோ பாவம்..நல்லவேளை நான் காலேஜ் போய்ட்டேன்...ஹா..ஹா..

    ReplyDelete
  11. என்ன தான் சொன்னாலும் நேற்று அழகா வீடு துடைச்சுக் கொடுத்துட்ட...இனி எப்போ மழை வரும் சூர்யா...i am waiting...

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் சும்மா...உல்லுலாய்க்கு அம்மா...அப்படியே உங்கள கலாய்ச்சேன்னா நினைச்சிங்க....போங்க...போங்க...என் தங்கக்குட்டி..செல்லக்குட்டி( நேற்றும் இப்படிச் சொல்லித் தானே வேலை வாங்குனீங்க)

      Delete
  12. டாடி...எல்லோருக்கும் நீங்கள் நன்றி சொல்லியிருபதிலிருந்து...புரிந்து கொண்டேன்....i love you...

    ReplyDelete
  13. எங்கம்மாட்ட காண்பிச்சேன் டி...படிச்சுட்டு, படிச்சுட்டு சிரிச்சாங்க...எங்க அப்பா வந்ததும் சொல்லி படித்தோம்...என் மாமாவிடம் போன் போட்டுச் சொல்லி படித்தோம். அப்புறம் எங்க பெரியம்மா...ரொம்ப பிரபலமாய்ட்டடீ...ஆல் டோட்டல் ஃபேமிலி உன்னை பாராட்டிங்....என்சாய்.....

    ReplyDelete
  14. எங்கம்மாட்ட காண்பிச்சேன் டி...படிச்சுட்டு, படிச்சுட்டு சிரிச்சாங்க...எங்க அப்பா வந்ததும் சொல்லி படித்தோம்...என் மாமாவிடம் போன் போட்டுச் சொல்லி படித்தோம். அப்புறம் எங்க பெரியம்மா...ரொம்ப பிரபலமாய்ட்டடீ...ஆல் டோட்டல் ஃபேமிலி உன்னை பாராட்டிங்....என்சாய்.....

    ReplyDelete
  15. மருமகளின் ஏக்கம் போக்க புது வழி கண்டுப்பிடிக்க வேண்டும் .
    கவலைப்பட தீபாவளிக்கு அப்பா வந்து விடுவார் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அங்கிள்...(அப்படித்தான் நம்புறேன்)

      Delete

  16. வணக்கம்!

    சின்னவள் மின்வலையுள் செந்தமிழ் பாய்ந்தோங்கும்!
    பொன்னவள் என்றும், புகழவள் - என்றும்
    பெயரோங்கும்! பெற்றோர் பெருமைநிறைந் தோங்கும்!
    வயலோங்கும் வண்ணம் வளர்ந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..நல்லது...நன்றி..வேறு ஒன்றும் தோன்றவில்லை

      Delete
  17. சின்னவருக்கு அடுத்த பதிவு போட நேரம் கிடைக்கவில்லையோ......????

    ReplyDelete
  18. சின்னவருக்கு அடுத்த பதிவு போட நேரம் கிடைக்கவில்லையோ......????

    ReplyDelete
  19. ஹாஹா! எழுத்தில் இருக்கு நகைச்சுவை கண்டு வாய் விட்டு சிரித்தேன் குட்டிப்பெண்ணே! சின்னவளென தலைப்பிட்டு விட்டி பெரியவளாய் யாரையும் விட்டுக்கொடுக்காமல் உன் மன ஆதங்கத்தினை வெளிப்படுத்திய உன் திறமை கண்டு மகிழ்கின்றேன். இன்னும் நிரம்பஎழுதும்மா!

    ReplyDelete
  20. etharthathai uanarvu poorvamaga eluthei kadasi varigal primebu. vaalthukal

    ReplyDelete