Sunday, 7 May 2017

நீட் நீட் நீட்

நீட்..நீட்...நீட்


எனக்கு ஆவடியில் இருக்கும் ஏ.எப் எஸ் பள்ளியில் செண்டர்...

சென்னைக்கு மிக அருகில் என்று ரியல் எஸ்டேட் காரர்கள் தான் சொல்வார்கள்....ஆனால்...தேர்வாணையம் ஒரு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில். போட்டதற்கு என்ன காரணமாக இருந்திருக்குமோ??

வெள்ளிக் கிழமையே அம்மா மட்டும் தனியாக வண்டியிலேயே அந்தப் பள்ளிக்கு போய் வந்து..அங்கு எத்தனை மணிக்கு பஸ்? எப்போது வேளச்சேரியிலிருந்து கிளம்பினால் அங்கு போய் சேர முடியும்? எவ்வளவு பெட்ரோல் ஆகிறது? இன்னபிற விஷயங்களை அறிந்து வந்ததால்..மிக சரியாக.அதிகாலை 4 மணிக்கு எழுந்த அம்மா லெமன் சாதம்.தண்ணீர் பாட்டில் வெள்ளை வேட்டி.தலைக்கு ஸ்கார்ப் சகிதம் கிளம்பி விட்டார்...( இந்த 4 மணி எல்லாம் எனக்கு மிட் நைட்)..(ஆனா இன்று சமத்தா கிளம்பிட்டேனாக்கும்) 
இப்போது மணி மிகச் சரியாக ஐந்து ஆக ஐந்து நிமிடம்
கிண்டி..காசி தியேட்டர்..அசோக் பில்லர்..வடபழனி..எம்
எம்.டி.ஏ..கோயம்பேடு வர 6.10..நாங்கள் வீட்டை விட்டு கிளம்ப்பி மடுவின் கரை முக்கம் வரும் போதே பரபர வென்று மனிதர்களும்..வாகனங்களும் செல்வதைப் பார்த்தால்..இவ்வளவு பேர் கடினமா வேலை பார்த்துமா இந்தியா இன்னும் வல்லரசாகலைனு தோன்றியது..

என்னமா இவ்வளவு கூட்டம்? என்று எல்லா சிக்னல் யும் கேட்டேன்..ஒரு முப்பது புதுக்கோட்டையை மொத்தமா அடுக்கி வச்சாப்ல கூட்டம்..கூட்டம்..கூட்டம்..
திருமங்கலம் ரோடு வழியா அம்பத்தூர் வந்து..அம்பத்தூர் தொழிற்சாலை சாலையின் வழியாக போய்க் கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ இருந்தோம்.முருகப்பா தொழிற்சாலை சாலையில் பிரிந்து முதலில் hvf அதன் பின் crpf அதன் பின் afs..

ஒருவழியாக பள்ளி வந்து சேர்ந்தோம்
மணி 7.20.நான் முதல் பேட்ச் என்பதால்  7.30 க்கு அழைக்கப் படுவேன்..

திருவப்பூர் திருவிழாவிற்கு வருபது போல் பெருங்கூட்டம்..பெரும்பாலும் டாக்டர் அம்மா..அல்லது டாக்டர் அப்பாவின் குழந்தைகள்..ஏற்கனவே அண்ணா பல்கலையில் பொறியியல் படிப்பவர்கள்.பி எஸ்.சி அலைட் சயன்ஸ் படித்தவர்கள்..போன வருடம் பிளஸ் டூ பாஸ் செய்து இந்த வருடம் வரை நீட் தேர்வுக்காக 50000 வரை பணம் கட்டி படித்தோர்..மற்றும் என்னைப் போல் சில நபர்கள்..

முதல் நாளே அம்மாவும்.சக்தியும் தேர்வு விதிகளைப் படித்து எனக்கு சொல்லி இருந்ததால் நான் சாதாரணமான தோடு மட்டும் அணிந்திருந்தேன்
கையில் இருந்த வாட்சை அம்மாவிடம் கழட்டி தந்துவிட்டேன்..

சிலரின் புகைப்படம் சரி இல்லாதத்தால் உடனடி.போட்டோக்காரர் வந்து போட்டோ எடுத்துத் தந்தனர்

இங்க தான் தொடங்கியது..முதலில் எங்கள் அட்மிட் கார்டை வாங்கி சரி பார்த்தார்கள்.அதில் போஸ்ட் கார்ட் சைஸ் போட்டோவும்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பார்த்தார்கள்..அதன் பின் ஆண்கள் வேறு பக்கமும் பெண்கள் வேறு அம்மணியிடமும் அனுப்பப்பட்டோம்.அந்த அம்மா எங்கள் புகைப்படம் சரி பார்க்கிறேன் பேர்வழி என்று எங்கள் முகத்தருகே தன் பல் தேயக்காத முகத்தை ஆறு முறை எங்கள் மூக்கருகே காட்டி நாங்கள் தான் என உறுதி செய்து கொண்டனர்..அதன் பின் வேறு ஒரு அம்மணியிடம் அனுப்பப்பட்டோம்..அந்தம்மா எங்கள் தலையை கலைத்து கலைத்து டார்ச் லைட் அடித்து பார்த்தார்கள்..சூரியஒளியில் தெரியாததை அந்த டார்ச் காண்பிக்கும் என்பதை யாரோ அவர்களுக்குத் தவறாக கற்பித்திருக்க வேண்டும்.அங்கிருந்து நாங்கள் மற்றொரு அம்மாவிற்கு மாற்றப் பட்டோம்..அந்த அம்மா கைகளை வைத்து கிச்சுலி காட்டியது போலவேமூன்று முறை செய்தார்..அடுத்த அம்மாவிடம் நாங்கள் அனைவரும் மாட்டிக் கொண்டோம். வந்திருந்த பெண்களில் இருவர் தவிர அனைவரும் ஜீன்ஸ் பேண்ட் லாங் டாப் அல்லது ஷார்ட் சர்ட் அணிந்திருந்ததால் அனைவரும் பேண்ட் க்கு பெல்ட் அணிந்திருந்தோம்
என்னோடு வந்த முஸ்லீம் பெண் புர்கா போட்டு உள்ளே ஜீன்ஸ் டாப் தான் போட்டிருந்தாள். பெல்ட் அனுமதி இல்லை என்று அந்தம்மா சொன்னதும் ஒரு பெண் அழ ஆரம்பித்து விட்டாள். அவளுக்கு பெல்ட் இல்லாமல் பேண்ட் நிற்காதாம்.எனக்குமே அதே நிலை தான். ஒரு வழியாக பெல்டை செக் செய்து அப்புறம் அனுப்புங்கள் என்று யாரோ ஒரு தெய்வம் வந்து சொல்ல நாங்கள் தப்பித்தோம்.

அதன் பின் காலணி..எனது காலணி சற்று ஷு போல் இருக்கும்.பெரும் பாலும் பின்னால் வார் வைத்திருந்த செருப்பு தான் போட்டிருந்தனர். முதலில் வேண்டாம் என்று  சொல்லி பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன் பின் எனக்கான அறை நல்ல வேளை தரை தளம் தான்..நடந்து கொண்டே ஏ ஏ ஏ ஏ ஏ போன பிறகு பள்ளி கட்டிடம் வந்தது..அப்பாடா என்று பெரு மூச்சு விட்டு பெல் அடித்து..உட்கார்ந்து ஓ எம் ஆர் ஷீட் கொடுத்தால்..அப்படி பில் பண்ணுங்க..இப்படி செய்யாதீங்க என கத்திக் கொண்டே இருந்தார்கள்..
என் அருகில் இருந்த பெண் ரிஜிஸ்டர் நம்பர் சரியாகக் குறித்து விட்டு செண்டர் பெயர் தப்பாக குறித்து விட்டாள்..மேடம் உடனே திட்டவும் ஐந்தாம் வகுப்பு மாணவி போல் அழுதாள்..பிறகு அந்த மேடமே சமாதானம் செய்த பின்னர் தான் அமைதியானாள்..அடிக்கடி தண்ணீர் தந்தார்கள்...

இதற்கிடையில் வெளியூரிலிருந்து வந்த மாணவன் 9.40 ஆனதால் அழுது கொண்டே வந்தான்.
வெளியில் அவனை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அவன் அழுது என் வாழ்க்கை கனவு என்று கதறி அழுததும் சில் பெற்றோரும் போலீஸும் சொன்னபிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறான்..( அனுமதித்த அந்த அன்பு உள்ளங்கள் வாழ்க)

ஆனால் பாவம் அம்மா போன்ற பல பெற்றோர்கள் வெளியில் வெயிலில் காத்திருக்க நேர்ந்தது.ஒரு பந்தல் போட்டிருக்கலாம்
மோர் பந்தல் செய்யும் அரசியல் வாதிகள் இந்த பெற்றோருக்கு உதவி இருக்கலாம்..ஆங்காங்கே இருந்த மர நிழலில் காத்திருந்து கொடுமையாய் வெயிலில் நின்றே காலம் கடத்தி இருக்கின்றனர்..ஏன் இது போன்ற தேர்வு எழுதும் பள்ளிக்குள் பெற்றோர்களை அனுமதிப்பதில்லை.அவர்களில் சுகர் பேஷண்ட் அல்லது பிரஷர் இருந்தால் அவர்கள் நிலை என்ன?..

அம்மா மீண்டும் அந்தக் கொடூர வெயிலில்  வர வேண்டுமே எவ்வளவு நேரம் கழிப்பறைக்கு செல்லாமல் திரும்ப முடியும்.மீண்டும்.பயணித்தால் மூன்று மணி நேரம் ஆகுமே என்ற கவலைகள் என்னை பயமுறுத்தியது..
அங்கே 1.30 க்கு புறப்பட்டு வீட்டுக்கு 3.50 க்குத்தான் வர முடிந்தது.இதே பஸ் அல்லது ரயில் மாறி வருவதென்றால் இன்னும் அதிக நேரம் பிடித்திருக்கும்..காலையில் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதாலேயே அம்மா தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.ஆனால் வெள்ளிக்கிழமை அலைந்து வந்ததோடு இன்றும் அலைந்ததால் அம்மா தான் பாவம்.. 

வெளியில் மோர் ஒரு டம்ளர் விலை 10 (நீர் மோர் என்று சொல்லப்பட்ட அதில் நீரின் விகிதாச்சாரம் சற்று கூடுதலாகவே இருந்ததாம் ) ஒரு மோசமான டீ விலை 10..தண்ணீர் பாட்டில் விலை இருபத்தைந்து....பாவம் அந்த மனிதர்கள் இந்த மாதிரி தான் சம்பாதித்துக் கொள்ள முடியும்
.
.
.
.
.
.
.
இன்றோடு தேர்வுகள் முடிந்தது என்று சொல்ல முடியாது நாளை முதல் சக்தியும் அம்மாவும் ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி..பாரு அண்ணா யுனிவர்சிட்டிக்கு அப்ளைப் பண்ணு..சத்தியபாமாவைப் பார்..வேல் டெக் பார்த்தியா...அப்படியே அந்த பிரிஸ்ட் யுனிவர்சிட்டியையும் பார் என்று சொல்வார்கள்...

நான் அதைக் கேட்கவும் தயாராக வேண்டும்

பின் குறிப்பு..தேர்வு எழுத தந்த பேனாவை திரும்ப கவனமாய் பெற்றுக் கொண்டனர்...

அதை வைத்து ஓசோன் ஓட்டையை அடைப்பார்கள் என நம்பப்படுவதால் அவர்களுக்கு இப்போதே நான் லொல்லூர் லூஜூ  விருது தருகிறேன்

7 comments:

 1. சூஜ்.....நானும் மற்றொரு நீட் தேர்வு முடிந்த கும்பலைப்பார்த்தேன்..

  பெற்றோர்கள் பரிதாபமாய் நிற்க..
  பிள்ளைகள் அப்படி ஒரு சிரிப்பாய் கடந்தனர்...
  உன் தேர்விலும் நீ வெல்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...

  ReplyDelete
 2. ஹஹஹ....என் மகனும் இன்று கண்ணூரில் எழுதினார்...நாங்கள் வெளியில்...நல்ல காலம் .இங்கெல்லாம்...மரங்கள் அதிகம்...அரபிக் கடல்....எனவே பிழைத்தோம்....பாவம் உங்கள் அம்மாவும், பிற பெற்றோரும்..

  கீதா: ரொம்வ காமெடியா சொலிருக்கீங்க....வள்ளுவரை நன்றாகப் படித்திருக்கிறீர்கள்...ஹஹஹ.. அதான் இடுக்கண் வருங்கால் நகுக....

  நாளை முதல் வேட்டையாடு...விளையாடு னு சொல்லுங்க....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள்....வெற்றி பெறவும்..நல்ல மனித நேயமுள்ள மருத்துவராக வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதால்...நீங்கள் வெற்றி பெற வேண்டும் ....

   Delete
 3. வாழ்த்துக்கள்
  தேர்வில் வெற்றி பெற்று சிறந்த மருத்துவராக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வெற்றியோடு வரவேண்டும் தாயே! இப்போதுள்ள மருத்துவர்களில் நூற்றுக்கு ஐந்துபேர் கூட நல்ல மருத்துவர் கள் என்று கூறமாட்டேன். நீங்களாவது நல்லபடியாக வந்தால்தான் நாளை இந்த நாடு உருப்படும்.

  ReplyDelete
 5. வெற்றியோடு வரவேண்டும் தாயே! இப்போதுள்ள மருத்துவர்களில் நூற்றுக்கு ஐந்துபேர் கூட நல்ல மருத்துவர் கள் என்று கூறமாட்டேன். நீங்களாவது நல்லபடியாக வந்தால்தான் நாளை இந்த நாடு உருப்படும்.

  ReplyDelete
 6. தேர்வில் வெற்றி பெற்று மருத்துவச்சியாக சேவைகளை வழங்கிட எனது வாழ்த்துகள் டா சூரியா.

  ReplyDelete