Monday, 8 May 2017

அம்சமில்லாத அம்சக் கோரிக்கைகள்

அம்மாவின் 24 அம்சக் கோரிக்கைகள்

1. தினமும்.காலையில் 5.30 க்காவது எழ வேண்டும்

2. காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி தியானம் செய்ய வேண்டும்

3. இனி என் படிப்பை எவ்வாறு வளமாக்கலாம் என்று திட்ட மிட வேண்டும்

4. தினமும் லெமன் ஜூஸ் அருந்தவ்வேண்டும்

5. ஒரு நாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்

6. எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்

7. நல்ல தரமான எனக்கு வாழ்க்கைக்கு முக்கியமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்

8. காலையில் தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

9. சில சமையல் குறிப்புகளை என் தேவை நிறைவேற்றிக் கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும்

 10. வலை தளங்கள் பார்க்க முக நூல்.பார்க்க என்று நேரம் ஒதுக்கி அந்த நேரம் மட்டும் பார்க்க வேண்டும்

11. தேவாரம்.திருவாசகம்
சிவபுராணம் போன்றவற்றை பாராயநம் செய்ய வேண்டும்.

12. என்ன படிக்கப் போகிறேன் அதற்கான நடைமுறை..இலட்சியம் போன்றவற்றை வகுத்து செயல் பட வேண்டும்

13.வெயில் காலம் என்பதால் மூன்று முறை குளிக்க வேண்டும்.

14. ஏரோ நாட்டிக்கல் இஞ்சினியரிங் கான பாடத்திட்டங்கள்...கட்டணங்கள் ..பற்றி பார்க்க வேண்டும்..

15. கல்வி கடன் தருவோர்..பற்றி விசாரித்து அறிய வேண்டும்

16. நடந்தே ராதா அங்கிள் வீடு வரை போய் ஆதித் ..அபர்ணா வோடு பேசி விளையாடி விட்டு வரவேண்டும்

17. பல தனியார் கல்லூரிகளில் நடக்கும் வகுப்புகளில் ஏதேனும் ஒன்றிலாவது போய் கலந்து கொள்ள வேண்டும்

18.நானாக தனியாக பீனிக்ஸ்.மற்றும் பிற இடங்களுக்கு போய் வர பழக வேண்டும்

19.ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் என் வலிமையை நிரூபிக்க வேண்டும்

20..மைதா உணவுகளைத் தவிர்த்து நீர் உணவுகள் அதிகம் உட் கொள்ள வேண்டும்

21.காய் கறி..கீரை..சாப்பிட வேண்டும்

22.ஏதேனும் ஒரு பிராஜக்ட் செய்து முடிக்க வேண்டும்

23. என்னென்ன புத்தகங்கள் படித்தேன் என்பது பற்றிய குறிப்புகள் வைக்க வேண்டும்

24.பிரதோஷம்.சஷ்டி.சதுர்த்தி.சிவராத்திரி..எனது நட்சத்திர நாளில் கோயிலுக்குப் போக வேண்டும்.அல்லது வீட்டில் சிறப்பு பூஜை.பிரார்த்தனை செய்ய வேண்டும்

 இவ்வளவையும் பண்ண வேண்டுமாம்...

ஹேஹ்ஹ்ஹே..

அரசாங்கத்திடம் விடுகிற பற்பல அம்சக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றவா செய்கிறார்கள்???

கிடப்புல தானே கிடக்கு

என்ன கில்லர்ஜி அங்கிள் நான் சொல்றது சரி தானே??

இதை தயவு செய்து தனபாலன் அங்கிள் ட்ட சொல்லீராதீங்க...( அவர் பெரியவங்க சொன்னா கேட்கணும் பார்)

அவருக்குத் தெரியாம நாம ரகசியமா வச்சுக்குவோம்

தெர்மா கோல் போட்டு மறைச்சிருவோமா கில்லர்ஜி அங்கிள்??

 இஸ்க்கு லக்கடி லாலா சுந்தரி  கோலா கொப்பரை கொய்யா...

நா தூங்கப் போறேன்....

பின் குறிப்பு

இதை அம்மாக்கிட்டயும் சக்தி கிட்டயும் யாரும் சொல்லீராதீங்க ...காபி..பால்..மோர் தந்து கூட கேப்பாக ...அப்ப கூட சொல்லீராதீய

5 comments:

 1. அந்த கோரிக்கைகளை நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் எனக்கும் இல்லை என்பதையும் கூறிக்கொண்டு...

  ReplyDelete
 2. இதெல்லாம் ரொம்ப அநியாயம்... இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது... 24 மட்டும் தானா...? இன்னமும் அதிக கோரிக்கைகள் தேவை என்பதால் ஏற்றுக் கொள்ளவே முடியாது...

  ReplyDelete
 3. 22 nala iruku. 4, 6 um maru pariselanai seiayavum. mudithal www.anatomictherapy.org/tvideos.php ithuvum serthu kolavum.

  ReplyDelete
 4. சின்னவளே..நான் அப்ப சொன்னத இப்ப நீங்க சொல்றீங்க...இப்பவும்...தினமும் தலைக்கு குளித்தல் ...குளித்தல் என்றாலே எங்கள் ஊரில் தலைக்குக் குளிப்பதுதான்...இல்லைனா மேலு கழுவுதல் என்போம்....இரண்டு நேரம் ...அதுவும் சென்னைல பைப்புல காத்தே வந்தாலும் ...குளிரந்தாலும்.....ரெண்டு நேரம் குளிப்போம்...நோட் இட்...குளிப்போம்....மீனிங் மேலே....ஸோ இப்ப கோரிக்கைகள்ல்ல் இன்னும் விட்டுப் போனது இருக்கே....அம்மாகிட்ட சொல் லைட்டா போச்சு...இல்ல செல்வா கிட்ட...ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete