Saturday, 26 September 2015

ஒரு கதை ........[பெரிய மனிதர்களுக்கு]

                  ஒரு வீட்ல தாத்தா  அவர் மகன் ,மருமகள்,பேரனோடு  இருந்தார் . மகனுக்கும் மனைவிக்கும்  அவரை பிடிக்காது  திட்டிடே இருப்பாங்க. அவருக்கு அலுமினிய  தட்டில் தான் பழைய சாதம் வைப்பாங்க, அத பார்த்த பேரன் ஒரு நாள் அப்பா தந்த பாக்கெட் மணில்ல  இரண்டு அலுமினிய  தட்டு  வாங்கி வந்தான் ‘ஏண்டான்னு  கேட்டா  உனக்கு தான் அப்பா நான் வளர்ந்த அப்பறம் விலை கூடிடும் அதான் இப்பவே  வாங்கினேன் ` என்றான்  .
          இப்படிதான் ஒவ்வொறு குழந்தையையும்  சமூகத்தின் எதிரிகளாக மாற்றி  வைதிருக்கிறோம் , இந்த கதை  நான்  ஐந்தாவது படிக்கும் போது  படித்தது.
     
குழந்தை என்பது  ஒரு உன்னதமான ஆத்மா, அதை நாம்  சமூகம், சாதி,மதம் ,இனம் என பிறக்கும்போதே பிரித்து  வைத்து விட்டோம் இது போக இன்னும்  நிறைய  கட்டுபாடுகள் .பெற்றோர்கள்  பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும்  செயல் இருக்கிறதே ‘இத பாரு ஸ்நாக்ஸ யார்கிட்டேயும் தரக்கூடாது  சரியா ‘ என்று கூறி அதன் மனதை சிறு வயதிலேயே நாம்தான் மாற்றுகிறோம்.
சக்தி அக்கா ஒரு தடவை சொன்னா 
                                   “குழந்தைகள் ஒருபோதும் தம்
                                         பெற்றோரை  பிறரோடு ஒப்பிடுவது இல்லை
                                         உண்மையில் யார்  பெரியவர்கள்”
      அப்பா அடிச்சாலும் அப்பா நமக்கு  ஒரு ஹீரோ தான்  அனா பிள்ளை சேட்டை பண்ணும்போது எப்படி குரங்குன்னு திட்ட தோன்றுகிறது. 

வீட்டில் பால் வாங்கி வரவேண்டும் என்று லஞ்சம் கொடுத்து  பழக்கியதால் தான்  அவன் தன் வேலை பார்க்க லஞ்சம் கேட்கிறான்.

 நாம் குழந்தையை தொலைக்காட்சி பார்க்க பழக்கி விட்டு அவன்  ஆசிரியரிடம் போய் எப்ப பார்த்தாலும்  அவன் டீவி பார்த்துகொண்டே இருக்கிறான் என்று கூறினால் என்ன அர்த்தம்


குழந்தை உங்களின் கண்ணாடி அது உங்களை தான் பிரதிபலிக்கும் நீங்கள் இனிமையானவர் என்றால் அது இனிமையானதாக வளரும்
நீங்கள் சிடுசிடுவென்று உங்கள் பெற்றோரை காப்பகம் அனுப்பினால் அது உங்களை நாளை  காப்பகம் அனுப்பும் .இதற்கு முன் பல பேர் சொன்னதுதான் ஆனாலும் சொல்கிறேன் .”குழந்தை உங்களின் மூலம் உலகிற்கு வந்தது உங்களுக்காக வந்தது அல்ல” உங்கள் கனவுகளை அதனுள் திணிக்காதீர்கள் .

அவை  யாவற்றையும் ரசிக்கும்,நேசிக்கும் தன்மை கொண்டது உங்கள் கட்டுபாடுகள் மூலம் வெறுக்க வைத்து விடாதீர்கள்.
   உங்களை குறை சொல்லவில்லை உங்களின் ஏமாற்றம் கோபங்களாக  மாறி இருக்கலாம் . 

நான் சின்னவள் அறிவுரை கூறவில்லை சமூகத்தை மாற்ற   சொல்லவில்லை உண்மையில் அது ஒரு தனி மனித முயற்சியினால்   நடக்காது .நாம் நமது சூழல், பண்பாடு,சமூக மாற்றம்,நம் சமூகம்    முன்னேற முயற்சிகள், என பல தலைப்புகள் நாம் விவாதிக்க   வேண்டுமானால் சுவையானதாகவும் காரசாரமான ஒரு விவாதமாகவும் அமையும் .ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தாது.

       குழந்தைகள் -அவற்றை நேசியுங்கள் அவை வரைய  காகிதம் அல்ல வானத்தையே பரிசாக தாருங்கள்,விளையாட பொம்மை அல்ல நீங்களே பொம்மையாக மாறுங்கள்.அன்பை புரிய வைங்க [அன்பாஆஆஆஆ அவற்றால் ஒரு மிட்டாய் கூட வாங்க முடியாது என ஒதுக்கி விட வேண்டாம்]
    அவை பார்த்துகொள்ளும் நாளைய சமூகத்தை ----நீங்கள்  சமூகம் சமூகம் என்று கழுவாய் கரையாமல் சற்று ஓய்வு எடுங்கள்  

4 comments:

 1. சின்னவரின் பெரிய வாழ்த்தைகள்
  அனைவரும் ஏற்கத் தக்கவை
  சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சூர்யா ...
  கருத்துக்களைப் பகிர்வதும்,
  எழுத்தில் வெளிப்படுத்துவதும் அவசியம்..
  தாத்தாவின் தமிழ் உன் குருதியில் இருக்கு செல்வாவின் கவிதை வரிகளும் உனக்கு கலங்கரை விளக்கமாக இருப்பதால் தொய்வின்றித் தொடரட்டும் இலக்கியப் பணி ..
  விடுதலை நாளுக்கு நூல் வெளியிட வாரிசு ஒன்று தயார்...
  வாழ்த்துக்கள் உங்கள் வீட்டுக் கவிஞர்களுக்கு

  ReplyDelete
 3. அனல் பறக்குது சூர்யா, பிரமாதம்

  ReplyDelete