Sunday 2 April 2017

தேர்வு...தேர்வு.....தேர்வு

தேர்வு...தேர்வு...தேர்வு...தேர்வு...

31 ம் தேதியோடு பள்ளித்தேர்வுகள் முடிந்தது...

இனி என்ன வழக்கம் போல் புத்தகங்கள் ...வலைதளம்...குறும்படங்கள்...கட்செவி செய்திகள் என வாழலாம் என்று நினைத்து தான் முந்தைய பதிவைப் போட்டேன்...
கொஞ்ச நேரம் தூங்கலாம் என நினைத்த போது காபியும் வடையும் வந்தது...அடடா...மணக்க...மணக்க...சுவைத்து சாப்பிட்டதும்..அம்மா இரண்டு பெரிய தலையணைகள் எடுத்து வந்தார்.. 
அடடா
அம்மாவிற்கு தான் என் மேல் அளவு கடந்த அக்கறை பாசம் என்றெல்லாம் நினைத்தேன்...ஆனால் அது தலையணைகள் அல்ல..புத்தகங்கள்...2,ம் தேதி.JEE Main ஒருமணிநேரம் விளையாண்டது போதும்...படி..அக்கா வந்தா கேப்பா..நு சொல்லி..மீண்டும் என்னை அறைக்குள் அடைத்து...தள்ளி...கதவைச் சாத்திட்டுப் போய்ட்டாங்க....தலையணைகளில்...மன்னிக்க...புத்தகங்களில் இருந்தவை..சில படித்தவை..சில தெரியாதவை...

என்ன செய்ய்ய்ய்ய???

மனசுக்குள்ள...குயிலப் புடிச்சு கூண்டிலடைச்சு...கூவ ச்சொல்லுகிற உலகம்...என்ற சிச்சுவேஷன் பாடலைப் பாடிக்கொண்டே...படித்தேன்...

வாட்ஸப் குரூப் ல நாட்டுமக்கள் எல்லோரும்...சினிமா போகலாமா????பீச் க்கு போலமானு கேட்டு..கேட்டு மெஸேஜ் பண்ண....நானோ தலையணைகளோடு..மீண்டும் மன்னிக்க...புத்தகங்களோடு....

பின் குறிப்பு...இந்த பதிவை நான் எழுதிக் கொண்டிருந்த வேளையில்...சில அம்மாக்களும்..பற்பல அப்பாக்களும்..நீட் தேர்வுக்குப் படிக்கவும்..ஹிந்தி கற்கவும்..கணினி பயிற்சி..நீச்சல்,எழுத்துப் பயிற்சி.. பேச்சு..என்று ஏதேதோ பயிற்சிகளுக்கு அனுப்ப ஆலோசிப்பதாகவும்..பலர் முன் பணம் கட்டி சேர்த்து விட்டதாகவும் அறிந்தேன்...( ஆமா...ஐஸ் வாங்க...ஹோட்டல் கூட்டிப் போக...சினிமா கூட்டிப் போக..காசில்லை காசில்லை நு சொல்ற பெற்றோர் பெருமக்களே இந்த கோர்ஸ் ல கொண்டு போய் விட மட்டும் உங்களுக்கு காசு எப்டி கிடைக்குதுங்குற உண்மை எனக்குத் தெரிஞ்சாகணும்..)

என் தோழியை அவ அப்பா ...காசென்ன மரத்துலயா காய்க்குதுனு கேட்டாராம்
ஆமா...அதற்கான காகிதங்கள் மரத்திலிருந்து தானே எடுக்கப் படுகிறது...)

இன்றைய கேள்வி...மோடி அங்கிளுக்கு...

டிஜிட்டல் இந்தியாவை நீங்கள் உருவாக்கும் முன் குழந்தை போற்றும் இந்தியாவாக எப்போது மாற்றுவீர்கள்???

பற்பல நாடுகளுக்குச் செல்லும்.நீங்கள்...அந்நாட்டின் குழந்தைகள் நலன் மேம்படுத்த என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதில்லை...கேட்பதில்லையா???

செல்வ மகள் திட்டம் தவிர..கல்விக்கு...மகிழ்வான கல்விக்கு என்ன செய்தீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்???

கடைசியா...ஒரு குறும்பு அறிவுரை....அடுத்த முறை தமிழகம் வந்தால் அந்தம்மாவுக்கு நாலஞ்சு சீப்பு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க.....


( எங்கேயோ ஆரம்பிச்சு...எங்கேயோ முடிப்பதெல்லாம் ராகசூர்யா ஸ்ஸ்ஸ்டைலூ ஊ)))

8 comments:

  1. நல்லவேளை என்னைத்தான் கேள்வி கேட்டு குழப்பி விட்ருவியோன்னு.... பயந்துட்டேன் ஐயோ... ஐயோ.. பாவம் மோ(ச)டி

    ReplyDelete
    Replies
    1. அப்டி போடுங்க....சுட...சுட....பதில்....

      Delete
    2. ஆனா...உங்கள்ட்ட நிறைய்ய்ய்ய கேள்வி கேட்கணும் அங்கிள்....நாளைக்கு வாரேன்...

      Delete
  2. எந்த அம்மாவுக்கு சீப்பு..
    பாப்பு.. வச்சுட்டயே...

    ReplyDelete
  3. Andangaka kondakari.....karuva mullu thondakari ku seepu ?? Oh tharalama tharalam nalla oosiyum serthu!! Adadaa semma da thangam. God bless you da angel 😇

    ReplyDelete
  4. ஹஹஹ. மோடிக்கு நல்ல கேள்வி.....அது யாரு அம்மா...

    ReplyDelete
  5. Super da..என் மனசுல இருந்த அதே கேள்விகள்..இப்பலாம எந்த பள்ளியில புக்ஸ் அதிகமோ அது தா நல்ல பள்ளியாம்..

    ReplyDelete