ஒன்றுமே இல்லாத வீட்டில் நான்கு சுவர்களுக்கு இடையில் அமர்ந்து இருக்கிறார்கள். என் வயது பிள்ளைகள்..
யார் யாருக்கு யார் இல்லையோ இப்போதே கேட்க பயமாய் இருக்கிறது..
படிக்கபாடப் புத்தகங்கள் இல்லை என்பதைத் தவிர நடந்ததெல்லாம் இமாலய சோகங்கள்
உங்கள் டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்பது மாதிரியே கேள்விகள் தொடங்கிவிட்டன உன்னிடம் புத்தகங்கள் இருக்கா என்ற வினாக்கள்..
நாளை மறுநாள் தெரியும் இழந்த, இறப்பின் வலிகள்..என் காதுகள் எதையும் கேட்காமல் இருந்தால் தேவலாம். ஆனால் கேட்கும் திறன் அதிகம்``
மழை என்றால் ஒரு காப்பியோடு ஜன்னல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டே புத்தகங்கள் என்ற ஆசை ஆர்வம் எல்லாம் போய், ஒரு பேய் வந்த பயத்தை தந்தது என்னவோ?
ஒரு வாரம் ஒன்றுமே இல்லாத உலகத்தில் அதுவும் பட்டினியாய்..
அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோராலும் தேவதையாக தாங்கப் பட்ட நானா ? எனக்கா? அப்படியானால் என்னை விடவும் வசதியாய் இருந்த பிள்ளைகள் தாங்கியிருப்பார்களா?
மூன்று தலை முறையாய் நடந்த பிழைகள் மூன்று மாடி வரை வந்து தாக்கி விட்டுச் சென்றுவிட்டது..
தாத்தா அடிக்கடி சொல்வார்..”படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். உணர வைத்தது..பிரமாண்டமாக இருக்கும் சென்னை..பிரபலங்களைக் கொண்ட சென்னை..படித்தவர்கள் அதிகம் கொண்ட சென்னை...ஆனால் படித்தால் மட்டும் போதுமா? என்று நினைக்க வைத்து விட்டது..
இனி வரும் தொற்று வியாதி பற்றி தான் அதிகம் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்..
இன்னும் சாக்கடையும் மழைநீரும் அகற்றப்படாதது பற்றி யாரும் எதுவும் சொல்லாமலேயே பயணம் செய்து கொண்டே இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாங்கள் பிள்ளைகள் பண்ணும் சேட்டைகளை விட எங்கள் அம்மா பண்ணும் சேட்டைகள் தாங்குவது தான் அதிகம்.ஆனால் கொஞ்சம் குறைந்தது மனதுக்கு நல்லாயில்லை.
அப்பா அருகில் இல்லை என்ற வருத்தம் கொஞ்ச நாளாய் நல்ல வேளை அந்த நேரத்தில் அப்பா இங்கே இல்லை என்றே நினைக்க வைத்திருக்கிறது.
இனி எல்லோருக்கும் ஏகப்பட்ட கடமைகள், பொறுப்புகள், வங்கி புத்தகம், கேஸ் இணைப்பு, புதிதாய் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், ஆதார், வாகனங்கள் பழுது நீக்கம்( ஒரு வேளை இருந்தால்) அலைந்து கொண்டே இருக்க வேண்டும்..
மனதிடம் கொண்ட அம்மாக்கள், அப்பாக்கள் ஒன்றும் அலட்டவில்லை. அடுத்தடுத்த சம்பளத்தில் வாங்கிக் கொள்ளலாம்
ஆனால் ஏற்கனவே வாசம் “வீசும்” சென்னை இப்போது அதன் மடங்குகளில் வீசுது...
ஒரே ஒரு நன்மை நடந்திருக்கிறது இப்போது மக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். இதுவும் எவ்வளவு நாட்களுக்கோ????
சிரித்துக் கொண்டே இருக்கும் அம்மா, படித்துக் கொண்டே இருக்கும் அக்கா, கிண்டல் அடித்துக் கொண்டே இருக்கும் அப்பா...தடம் மாறி மீண்டும் தங்கள் இயல்புகளுக்குள் வந்து விட்டார்கள்..( வழக்கம் போல் நான் ஜாலி தான்..சிங்கமே சிங்கிளா வந்தாலும் சிரிப்பு தான்..அம்மா கிட்டருந்து இதைகூட கத்துக்கலைன்னா பின்ன எப்படி?)
ஏரி எல்லாத்தையும் வீடு கட்ட சொன்ன “ நாட்டாமை...நீ தீர்ப்பை மாத்தி சொல்லு””
கரிகாலன் காலத்திலேயே இந்த பேரிடர்ல்லாம் வந்தாச்சுங்க..அப்புறம்..அதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பான்னு எல்லோரும் மாறணும்.அதுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சா தேவலை..
(கடைசியா தத்துவம் சொன்னதாலே இதுவும் தத்துவம் தான்...என் தத்துவம்..)

அருமை
ReplyDeleteவாங்க..வாங்க..வணக்கம்..நான் உங்க எழுத்தைப் பார்க்க முடியலை
Delete// இப்போது மக்கள் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்... //
ReplyDeleteஅட...!
ஆமா அங்கிள்..ஆனா எத்தனை நாளைக்கோ...
Deleteயதார்த்த உண்மைகள் நண்பரே... மாறுவோம் வேறு வழியில்லை.
ReplyDeleteமாத்திடுவோம் அங்கிள் வாங்க. உங்க தளம் வந்தேனே பாத்தீங்களா? (வழக்கம் போல மருமகளே தான் நல்லாருக்கு...)
Deleteஒற்றை புன்னகையில் எல்லா சூழலையும் எதிர்கொள்ளும் தேவதைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஅலட்டிக்காம அழுத்தமா பதிவுபோட உன்னால மட்டும் தான் முடியும்.
தொடரட்டும்..
ஆமா...ஆமா...ஜாலியா எதிர்கொள்வோம்
Deleteகுப்பைகளைக் குப்பைத்தொட்டியில் போடும் மக்கள்...
ReplyDeleteசாக்கடையின் ஊடே பயணம் செய்கிறார்கள்...
உண்மைதான் அக்கா.மாறாதவர்கள் இருக்கட்டும்.நாம் மாறுவோம்.அவர்களின் பயணத்தை மாற்றுவோம்.
சாக்கடைப்பயணத்தை தந்தவர்களை இனி குப்பைத்தொட்டியில் வீசுவோம்.
அப்படியான மருந்து கண்டபிடிச்சாலும் உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர விடமாட்டாங்களே..வியாபரிங்க..
ReplyDeleteஅப்படியான மருந்து கண்டபிடிச்சாலும் உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர விடமாட்டாங்களே..வியாபரிங்க..
ReplyDeleteஅனுபவித்த வேதனைகளையும் அருமையாய் வரிகளில் வடித்திருக்கும் உம் திறமைக்கும்,நம்மை விட கஷ்டப்பட்டோ என்னாகி இருப்பார்கள் எனும் கேள்விக்கும் என் சல்யூட் சின்னவளே! பெயரின் மட்டுமே சின்னவளாய் எழுத்தில் பெரியவளாய் திகழும் உமக்கு என் நல்லாசிகள் மகளே!
ReplyDelete