Tuesday 17 March 2020

கடிதிவள் துணிவே


அம்மா நிரந்தரமாக சென்னை வந்து விட்டாள்..இனி வெள்ளி இரவு புதுகையிலிருந்து கிளம்பி சென்னை வந்து மீண்டும் ஞாயிறு சென்னையிலிருந்து கிளம்பி புதுகை செல்லும் அலைச்சல் அவளுக்கில்லை.கடந்த ஐந்து வருடமாக அவள் பட்ட இன்னல்கள் இனி இல்லை..இருக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.எல்லாம்.அரசு வேலை எதிர்பார்த்திருக்க,,அரசு வேலைக்கு ஏங்க...அம்மா.எங்கள் இருவரின் பொருட்டு அந்த வேலையை உதறிவிட்டு முற்றிலும் எங்கள் அம்மாவாக சென்னை வந்துவிட்டாள்

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளிராதல் தகுமே,மேந்நாள்
உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து.களத்து
ஒழிந்தனனே, நெருநல்.உற்ற
செருவிற்கு இவள் கொழுநன்பெரு
நிரை விலக்கி,ஆண்டுப் பட்டனளே
இன்றும்,செருப்பறை கேட்டு
விருப்புற்று, மயங்கி, வேல் கைக்
கொடுத்து, வெளிது விரித்து உடீ இப்
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகம் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என
விடுமே என்று 

( ஒக்கூர் மாசாத்தியார்)"

எழுதியது போலவே இரண்டு ஆண்டுகாலம் ஊதியம் இல்லாமல் துன்புற்ற போதிலும்..இவ்வேலை தவிர வேறு வருமானம் என்ன என்று உணர்ந்த போதிலும்,, பெற்ற அன்னையும் தந்தையும் ஏதும் கண்டு கொள்ளாமல் விட்ட போதிலும் தன் கணவனே தன்னை கைவிட்டு வேறு மனை புகுந்த பின்னும், உடன் பிறந்தவர்கள் யாரோ போல கடந்து போன போதிலும்,, கூட இருந்தவர்களே ( மெகா சைஸ்) குழி பறித்த போதிலும், சில.கயமைகள்.பணத்தால் துரோகித்துப் போன போதிலும்,, எங்களுக்காக,, எனக்கும் சக்திக்காக மட்டுமே உயிர்வாழும் பெரிய மனசுக்காரியை , என்ன சொல்லி அழைப்பது, எப்படி மகிழ்விப்பது ஏதும் புரியவில்லை..


(இது போன்ற பாடல்கள் எல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே பரிச்சயம் ஆகிவிட்டது)

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை 
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவிளிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் 
பாலை கடாத் தொடும் பத்து"

என்று எனக்கு மூன்றாம் வகுப்பு முதல் வாசிக்க, எழுத, எழுத்தை நேசிக்க, கதைகளைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்த அம்மா இனி எங்களுடன் எங்களுக்காக....எங்களால்.(
.😁)


நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் வெளியே செல்லக் கூடாது என்று கற்றுக் கொடுத்த அம்மாதான் simply red - stars  கேட்கவும் கற்றுக் கொடுத்தாள். Aviva - princesses Don't cru கேட்பாள் Queen பாடல்கள் கேட்போம்.Ariana Grande,  Billie Eilish, Camila cabello,, Taylor swift  இவர்களுடம் K.B சுந்தராம்பாள் எம்.எஸ் அம்மா..ஜானகி அம்மா..என்று எல்லோர் குரலையும் கேட்க வைத்தாள். ரசிக்க வைத்தாள்

ஆங்கில எழுத்தாளர்களான Jane Austen முதல் Charles Dickens, Shakespeare, ரஷ்யனில் Tolstoy, Pushkin , Vladimir, Ivan, Nikolori என்று எங்கள் அறிவை விரிவு செய்தாள்.அகண்டமாக்கினாள். எங்கு சென்றாலும் எங்கள் பார்வையை விசாலமாக்கக் கற்றுத்தந்தாள்.


பல நேரம் இவள் எப்படி இந்தப் புதுக்கோட்டை யில் பிறந்தாள்,? இவள் எப்படி இப்படி சாதாரணமாய் வாழ்கிறாள் என்று.பிரமிக்கும் அளவுக்கு இருக்கும். சில நேரம் இவ்வளவு குழந்தை மனசா இவளுக்கு என்றும் பிரமிக்க வைப்பாள்

அம்மா எல்லோருக்கும் அம்மா தான்..ஆனால் எனக்கும் சக்திக்கும் அப்பாவாக, தாத்தாவாக, அண்ணனாக, எல்லாவற்றுக்கும் மேலாக தனி ஆளாய் நின்று சமாளித்தாள். சூழ்நிலை அவளை மிகக் கொடூரமான வாழ்க்கைக்குத் தள்ளிய பிதும் அவள் முகத்தின் புன்னகையின் வெளிச்சம் பிரகாசமானதே தவிர குறையவில்லை

அம்மா பேக்கைத் தூக்கிக் கொண்டு (ஊருக்குக் கிளம்பும் போது) மாடியிலிருந்து கீழே இறங்குமுன்னே , கண்ணீரை அடக்கிக் கொண்டு இனி அம்மா எப்படீ வருவாங்க என்று கேட்கலாம் என்று நினைக்கும் போதே சக்தியின் கண்களில் வழியும் கண்ணீரைப் பார்த்து அப்படியே அடங்கி இருக்கிறேன்.

இவள் அன்பைக் கூட நிராகரிக்க முடியுமா என்று ,"சிலர்" எங்களை ஆச்சர்யப் படுத்தி இருந்தாலும் அம்மாவிடம் பேசும், பழகும், அன்புள்ளங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஏதும் தோன்றவில்லை.
ஒரே உதாரணம் தன் மேல் வெறுப்பை மட்டுமே உமிழ்ந்த தன் மேலதிகாரியை, அம்மா என்று அழைக்க வைத்து எங்களை அவரின் தங்கைகள் என்று பேச வைத்த மாண்பு அம்மாவுக்கு மட்டுமே உண்டு. ( சக்திக்கு அவர் என் தங்கைக்கு வாழ்த்து என்று அனுப்பி இருப்பதே சான்று)

அம்மாவை யாராலும் வெறுக்க முடியாது என்பதற்கும் இதுவே சான்று.

இப்போது எனக்கும் சக்திக்கும் இன்னுமொரு குறிக்கோள். எங்கள் இலட்சியத்திற்காக அம்மா எங்களோடு வந்துவிட்டாலும் அம்மாவின் எழுத்தாற்றல் மேம்பட அவள் அறிவை இன்னும் அகலமாக்கி விட நாங்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

பின் குறிப்புகள்

* இனி அவ்வப்போது ( உப்பு போட மறந்த) உப்பில்லாத உணவுப் பொருட்களை நாங்கள் சாப்பிட நேரிடும்

* துணி அலமாரி மிகச் சரியாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

* வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க நிர்பந்திக்கப் படுவோம்.

* இனி எல்லா வெள்ளிக்கிழமையும் - பிரதோஷ தினத்தன்றும் வீடு ஊதுபத்தி, சாம்பிராணி வாசத்துடன் இருக்கும்.

* அவ்வப்போது கஷாயம் என்ற பெயரில் கருப்பாய் , கசப்பாய், ஒரு திரவம் தரப்பட்டு, கட்டாயமாகக் குடிக்க வேண்டும் என்று சொல்லி கட்டாயப் படுத்தப் படுவோம்.

வாராவாரம் கோயில் சஷ்டிகவசம்.சிவபுராணம். எல்லாம்.கட்டாய விதிமுறைகள்

* பயமற்ற சூழலில் தூக்கம்.நல்லா வரும். பாதுகாப்பாய் உணர்கிறோம்.

* எல்லாவற்றுக்கும் மேல் இனிமேல் தினமும் சாப்பிட வீட்டில் சாப்பாடு இருக்கும்- சூரஜ் குட்டி என்று ஒரு குரல் ஒலிக்கும் அன்பாய் ...பிரியத்துடன்.

11 comments:

  1. முன்பு அனந்துவின் காபிக்கடை என்று ஒர்ய் கட்டுரை எழுதியிருந்தேன் நிசக்கதை அதன் முடிவில்

    இப்போது அனந்து தொய்வின்றி பல வேளை காபிக்குடிக்கிறான் மறறவ்றுக்கும் கொடுக்கிறான்.
    காலையில் ஜெய ஜெயஸ்ரீ ஸுதர்ஸன ஒலிக்கிறது

    இரவு நேரங்களில் விவுத் பாரதியில் விளம்ப்ரம் கேட்கிறரு

    பால் வாங்கப் போகும் போது லோடி ரோடுக்கே சொந்தக் கரன் போல் நடுரோட்டில் மெததனமாக நடக்கும் காட்சி மீண்டும் உதயமானது

    அம் அனந்துவிம் காபிக் கடை புணர் உதயமானது

    எல்லோரும் வருக
    என்று முடித்திருந்தேன்.அதுவும் நடந்ததை அடிப்படையாகக் கொண்டு எழுதியது

    எழுத்துப் ஷைலி நன்றாக இருக்கிறத்ய் தொடரவும்

    பின் குறிப்பு அவ்வப்போரு கருப்பாய் ஒரு திரவம்

    அது சுவாதி காபி தானே

    பட்டுக்கோட்டை பலராமன்

    ReplyDelete
  2. அழகான எழுத்து....நீ சுயம்பு...

    ReplyDelete
  3. உண்மை அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இல்லத்தில் மகிழ்ச்சி இனியெனும் நிலைக்கட்டும்...

    ReplyDelete
  5. அழுகை வருகிறது சகோதரி... இனியாவது அனைத்தும் நலமாக அமையட்டும்...

    ReplyDelete
  6. அருமையான வெளிப்பாடு.படிக்கும் பொழுது நானும் நீயானேன்.சுவாதி எனக்கும் தாயானாள்.

    ReplyDelete
  7. உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும்.செல்லமே....வெகுநாள் இல்லை...விரைவில்...

    ReplyDelete
  8. மகளே உனது அழுகையும் கண்ணீரும் உன்னை மென்மேலும் தூய்மையாக்கும் உனது அன்பை அனுபவிக்க முடியாத துர்பாக்கியசாலியை தயவு செய்து சபித்து விடாதே உனது உயரத்தை அவர் பள்ளத்தாக்கில் இருந்து பார்க்கட்டும்.மன்னித்து விடு அதுவே அதிக பட்ச தண்டனை.
    புரட்சிகவிதாசன்

    ReplyDelete
  9. அதிர்ச்சியும் வருத்தமும்.. உங்கள் வாழ்வு இனிதாகட்டும்

    ReplyDelete
  10. இருவர் குறிக்கோளும் நிறைவேற உங்கள் இருவரின் அறிவோடு உங்கள் அம்மாவின் அன்பும் துணைவர வாழ்த்துகள் டா

    ReplyDelete